http://veeduthirumbal.blogspot.com/2011/01/blog-post_27.html
சமீபத்தில் புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓர் விழாவில் "தேர்வுக்கு தயார் செய்வதும், தேர்வு எழுதுவதும்" என்ற தலைப்பில் பேச என்னை அழைத்திருந்தார்கள்.உரத்த சிந்தனை என்ற அமைப்பு சென்னையிலும் பிற ஊர்களிலும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. நல்லோர் வங்கி இதன் மற்றொரு பிரிவு. நல்லோர் வங்கி பெயருக்கேற்ற படி தொடர்ந்து பல நல்ல காரியங்களில் ஈடு படுகிறது.தீபாவளி நேரங்களில் முதியோர் இல்லம் சென்று இனிப்பு, புத்தாடை வழங்கி அவர்களுடன் நேரம் செலவிட்டு வருவது, ரத்த தானம்..இப்படி. உரத்த சிந்தனை மாதா மாதம் மூன்றாவது ஞாயிறன்று சென்னை LLA பில்டிங்கில் ஒரு விழா நடத்துகிறது. இதில் கவியரங்கம், பட்டி மன்றம் என உரத்த சிந்தனை உறுப்பினர்களே பங்கு பெறும் நிகழ்ச்சி இருக்கும். பத்து வருடத்திற்கு மேல் நான் இரு அமைப்புகளிலும் உறுப்பினர். கல்யாணத்திற்கு முன் ஆர்வமாக நிறைய நிகழ்சிகளுக்கு சென்றவன் அதன் பின், மாதா மாதம் செல்வதை வேலை பளுவால் பெரிதும் குறைத்து விட்டேன்.
இருந்தும் புழுதிவாக்கம் நிகழ்ச்சி மாணவர்களுடன் சந்திப்பு என்பதால் நல்லோர் வங்கி நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் சம்மதித்தேன். இந்த பள்ளியில் பார்த்த சில வித்யாசமான விஷயங்கள்/மனிதர்கள் உங்களுடன் பகிர்கிறேன்.
தலைமை ஆசிரியர்
இந்த வருடம் மார்ச் மாதத்துடன் ஓய்வு பெறும் இவர் சொன்னது: " இந்த பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவன், மாணவியும் மிக மிக கஷ்டப்படும் குடும்பத்திலிருந்து தான் வருகிறார்கள். பலருக்கு தந்தை இல்லை அல்லது மனைவியை விட்டு ஓடியிருப்பார். குடிகாரனாகவோ, வேலை இன்றியோ இருப்பார். நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு கேளுங்கள்" என்று சொல்லி விட்டு, மைதானத்தில் சென்று கொண்டிருந்த யாரோ ஒரு சிலரை அழைத்து கேட்க, ஒவ்வொருவரும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையில் தான் இருந்தார்கள். கேட்கும் போதே மனதை தைத்தது.
"இவர்களில் பலரும் பள்ளிக்கு வருவதும், படிப்பதும் ரொம்ப பெருசுங்க . குடும்பத்தில் அவ்வளவு பிரச்சனை. எப்படியாவது எல்லாரையும் பாஸ் மார்க் வாங்க வச்சிடனும்னு நாங்க எல்லாரும் எவ்வளவோ கஷ்டபடுறோம். சில பேர் சரியா ஒத்துழைக்க மாட்டேன்கிறான். போன வருடம் பிளஸ் டூவில் 91 சதவீதம் பாஸ் செய்தோம். அடுத்த வருடம் பிளஸ் ஒன்னில் பெயில் ஆன பசங்களை பரவாயில்லைன்னு, ஒரு வருஷம் வீணாக்காம பிளஸ் டூ அனுப்பிட்டோம். அவங்க எல்லாம் பிளஸ் டூவிலும் பெயில் ஆனதால் பாஸ் சதவீதம் குறைஞ்சு 72% ஆகிடுச்சு. இந்த வருஷம் சரியா படிக்கதவங்களை பிளஸ் ஒன்னில் நிறுத்திட வேண்டியது தான்" என்றார்.
முத்து குமார சாமி

அரசு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தனது கிராஜுவிட்டி பணம் பத்து லட்சத்தை ஏழை குழந்தைகள் படிப்பிற்கு மட்டுமே குடுத்து விட்டார். அதன் மூலம் வருடா வருடம் மாணவர்களுக்கு யூனிபார்ம், நோட்டுகள் போன்றவை வாங்க உபயோகிக்கின்றனர்.
வெள்ளைநிற மீசை/ தலைமுடியுடன் இருப்பவர் முத்து குமார சாமி
அவருக்கு வலப்புறம் இருப்பவர் தலைமை ஆசிரியர்
நல்லோர் வங்கி மாதம் இரு முறை மாணவர்களுக்கு பயன் படும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்துகிறது. அவற்றிற்கு அவசியம் வந்து விடுகிறார் இவர். " கிட்ட தட்ட பத்து பள்ளிகளுக்கு நான் அடிக்கடி சென்று வந்தாலும் இந்த பள்ளியில் தான் நல்ல ரிசப்ஷன் உள்ளது. நல்லோர் வங்கி போன்ற அமைப்பு செய்யும் உதவிகளை முழுமையாய் உபயோகிப்பது இவர்கள் தான்" என்றார் அவர்.
ஓய்வு பெற்ற பணத்தை இத்தகைய விஷயத்துக்கு செலவழிக்க எவ்வளவு நல்ல மனம் வேண்டும்! அவர் இப்போது எப்படி தன் வாழ்க்கையை கழிக்கிறார், தன் மகன்களுடன் உள்ளாரா என்றெல்லாம் கேள்விகள் ஓடினாலும் அதையெல்லாம் அவரிடம் கேட்க கூச்சமாக இருந்தது. கேட்கவில்லை.
பிச்சம்மாள்
நல்லோர் வங்கியின் மூலம் இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் திருமதி.பிச்சம்மாள் 67 வயது இளைஞி. பசங்க எல்லாரும் "பாட்டிம்மா" என பாசத்தை பொழிகிறார்கள். ஒவ்வொரு வாரமும் கதை சொல்கிறார். பாட்டு பாடுகிறார். டான்ஸ் கூட ஆடுவாராம்!!

அரசாங்கத்தின் சமூக சேவை பிரிவில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அதனால் ஓய்வு பெற்ற பின்னும் இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்திக்கொள்ள ஆர்வம் உள்ளதாக கூறுகிறார். மூன்று பையன்கள், ரெண்டு பெண்கள் அனைவரும் திருமணம் ஆகி தனியாக உள்ளதாகவும் கணவருடன் தனியே இருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்து என கையால் காபி சாப்பிட்டுட்டு போங்க என மிக அன்பாக சொன்னாலும், மறுபடி ஆபிஸ் செல்ல வேண்டியிருந்ததால் என்னால் செல்ல முடிய வில்லை. நிச்சயம் ஒரு முறை சென்று அவர் கையால் காபி சாப்பிடுவேன்! எங்க மடிப்பாக்கம் தானே!!
இவருடன் இந்த நிகழ்ச்சிகள் நடத்த உதவும் மற்றொருவர் திரு. ராம நாதன். இவரும் ஓய்வு பெற்றவர் தான். பிச்சம்மாள், ராம நாதன், முத்து குமார சாமி ஆகிய மூன்று பெறும் ஓய்வு காலத்தை மிக பயனுள்ள முறையில் கழிக்கிறார்கள் என்று தான் சொல்லவேண்டும்!
அடுத்து இந்த நிகழ்ச்சியில் சந்தித்த நான்கு மாணவர்கள் பற்றி..
லாவண்யா
இந்த மாணவியின் தந்தை சமீபத்தில் விபத்தில் மறைந்து விட்டார். தாயார் மட்டுமே. குடும்பம் நடத்துவதே கேள்வி குறியானதால் , நன்றாக படிக்கும் இவள் படிப்பை பாதியில் விடும் யோசனையில் இருந்திருக்கிறாள். இது உரத்த சிந்தனை மூலம் உறுப்பினர்களுக்கு தெரிய வர, என். ஆர். கே என்ற ஆடிட்டர் இவளுக்கு மாதா மாதம் ஐநூறு ரூபாய் தருவதாகவும் படிப்பை நிறுத்த வேண்டாம் என்றும் கூறி உள்ளார். இவளுக்கு தற்போது பேன்க் அக்கவுன்ட் துவங்க பட்டு மாதா மாதம் பணம் சேர்க்க படுகிறது. விபத்தின் மூலம் தந்தை இறந்ததால் அதன் மூலம் பணம் ஏதும் கிடைக்குமா என்றும் உரத்த சிந்தனை மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.
அருள் அரசு
பேச்சு போட்டியில் பேச வந்த அருள் அரசு பேசும் முன்னும், பேசும் போதும், பேசிய பின்னும் அனைத்து மாணவர்களின் கை தட்டல்களை வாங்கினான். அற்புதமான பேச்சு !! என்ன ஒரு தெளிவு! எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்துள்ளான்! பயமே இல்லை.இவன் பேசும் போது நான் ஆச்சரியத்தில் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அருகிலிருந்த தலைமை ஆசிரியர், என் மனம் படித்த மாதிரி " எந்த பள்ளியில் எந்த போட்டிக்கு போனாலும் முதல் பரிசு வாங்கிடுவான் சார்" என்றார். " நல்லா படிப்பானா சார்" என்றேன். " இந்த வருடம் பிளஸ் டு.. ஸ்டேட் ரேன்க் வருவான்னு எதிர் பாக்கிறோம்"
ஜெய லட்சுமி
ஜெயலட்சுமி தாயார் ஆயாவாக பணி புரிகிறார். ஜெய லட்சுமி தொடர்ந்து அனைத்து வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெறும் மாணவியாக இருக்கிறாள். அன்று நடந்த பேச்சு போட்டியிலும் அழகாய் பேசி பரிசு வாங்கினாள். ஆக்ரோஷமாய் பேசி முடித்து விட்டு கையோடு போய் பள்ளி பைப்பில் தண்ணீர் குடித்து விட்டு தரையில் வந்து அமர்ந்த இவள் கனவு " ஐ. ஏ. எஸ்" ஆவது ! பதினொன்றாவது படிக்கும் இவள் பார்க்க எட்டாம் வகுப்பு மாணவி போல் உள்ளாள் ( Malnutrition).
ராஜேஸ்வரி
சில நேரம் நிஜம் கதைகளை விட சுவாரஸ்யமானது.
ராஜேஸ்வரி குடும்பத்துக்கு வீடு இல்லை. வாடகை குடுக்கும் வசதியும் இல்லை. பள்ளியிலேயே வாட்ச் மேன் போல தங்கி கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. நான் பேசி கொண்டிருக்கும் போது கூட, தூரத்தில் வெட்ட வெளியில் இவர்களின் அடுப்பு எரிந்து கொண்டிருந்ததை கவனித்தேன். இந்த நிலையிலும் ராஜேஸ்வரி பத்தாம் வகுப்பில் 465 மதிப்பெண் வாங்கியிருக்கிறார். தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி தொடர்ந்து முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருக்கிறார்.
இந்த வருடம் முதல், பள்ளியில் அறிமுக படுத்தப்படும் "வருடாந்திர சிறந்த மாணாக்கன்" விருது இந்த வருடம் பள்ளியையே வீடாய் கொண்ட ராஜேஸ்வரிக்கு தான் கிடைக்க உள்ளது !
நான் பேசும் போது ஒரு சாதாரண கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து இந்த நிலைக்கு என்னால் வர முடியும் என்றால், சென்னையிலிருக்கும் உங்களால் இன்னும் நன்கு வர முடியும் என்று பேசினேன். (எனது பேச்சிற்கு பாய்ண்டுகள் நண்பர்கள் சிலரிடம் கேட்டேன். நல்ல சில கருத்துகள் தந்து உதவிய ராமலட்சுமி & தேவ குமாருக்கு நன்றி.)
மாணவனாக நான் செய்த தவறுகள், அவற்றில் கற்ற பாடங்கள் ஆகியவையும் பகிர்ந்தேன். பரீட்சைக்கு தயார் செய்வது மற்றும் எழுதுவது குறித்து சில குறிப்புகள் தரப்பட்டது. இறுதியில் பேசியதிலிருந்து சில கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் தந்து பேச்சை முடித்தேன்.
மொத்தத்தில் இது ஒரு நெகிழ்வான, நிறைவான விழாவாக இருந்தது.

No comments:
Post a Comment