pasumainallur.blogspot.com/2011/12/blog-post_28.html
தமிழரின் பாரம்பரியத்தை நம் வீட்டு குழந்தைகளின் பிறந்தநாள்விழா
முலமாக பாதுகாப்பது எப்படி என எழதுவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில் இப்போது
எல்லாம் கதர் ஆடை அணிவதும், தமிழில் எழதுவதும், பேசுவதும் கூட நமது ஊர்களில்
காணாததைகண்ட புதுமை காட்சியாய் போய்விட்டது.
எந்த ஒரு மனிதசமுகம் தன்மொழியையும், பாரம்பரிய பழக்கவழக்கங்ககளையும் மறக்கிறதோ அந்த நொடியே அதன் அழிவு ஆரம்பமமாகி அந்தசமுகம் கூடியவிரைவில் மண்ணுடன் மண்ணாய் மறைந்துவிடும் (மூடபழக்கவழக்கங்கள் இந்த தொகுப்பில் வரா, பலர் அதைத்தான் பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள்). அப்படி நடவாமல் இருக்க எடுக்கும் சிறுமுயற்சிதான் இது.
எந்த ஒரு மனிதசமுகம் தன்மொழியையும், பாரம்பரிய பழக்கவழக்கங்ககளையும் மறக்கிறதோ அந்த நொடியே அதன் அழிவு ஆரம்பமமாகி அந்தசமுகம் கூடியவிரைவில் மண்ணுடன் மண்ணாய் மறைந்துவிடும் (மூடபழக்கவழக்கங்கள் இந்த தொகுப்பில் வரா, பலர் அதைத்தான் பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள்). அப்படி நடவாமல் இருக்க எடுக்கும் சிறுமுயற்சிதான் இது.
பாரம்பரியம் காக்கும் பிறந்தநாள் விழாவிற்கு சில யோசனைகள்:
௧) தமிழில் வரவேற்ப்புவாசகத்தை மறுசுழற்சி
செய்யப்பட்ட காகிதத்தில் அச்சடித்து கொடுக்கலாம்.
௨) விழாவிற்கு வருவோரை பாரம்பரிய உடை அணிந்து வரச்சொல்லலாம்.
௩) வருவோரை இருகரம்கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்க்கலாம்.
௪) பெற்றோரும், மற்றோரும் குழந்தையை போற்றி, வாழ்த்தி தமிழில்
கவிதை எழுதலாம், ஓவியம் தீட்டலாம்.
௫) அரசியல்வாதிகள்போல சுவரோட்டிகளை ஒட்டாமல் திருக்குறளையும்,
பாரதி மற்றும் பாரதிதாசனின் வரிகளை மணிமணியாய் வருவோர் கண்களில் படும்படி
வைக்கலாம்.
௬) சர்க்கரை தண்ணிபோல் காபி/ டீ கொடுக்கமால் சுக்கு, கருப்பட்டியை
சுடுநீரில் கலந்து இதமாக அருந்த கொடுக்கலாம்.
௭) மனிதகுலம் வாழ, மிளிர குடும்பத்துடன் குத்துவிளக்கு ஏற்றி
விழாவை தொடங்கலாம்
௮) இருவழி தாத்தா, பாட்டிகளை (அம்மத்தா, அப்பிச்சி, அப்பத்தா,
அப்பாரு) வரவழைத்து குழந்தை உட்சிகுளிர முத்தமிட்டு வாழ்த்தச்சொல்லலாம்.
௯) கேக்கு வெட்டி கலர்கலராய் மிட்டாய் கொடுப்பத்தை தவிர்த்து பருப்பு,
தானியங்கள் கலந்த மாவை இனிப்பாக கொடுக்கலாம்.
௰) சினிமா குத்துப்பாட்டு தவிர்த்து மகிழ்ச்சிதரும் சிறார்களின்
பாடல்களையோ அல்லது பாரதியின் பாடல்களையோ காற்றில் தவழ விடலாம்.
௧௧) நண்பர்களையும், உறவினர்களையும் தங்கள் கைபேசிக்கு சிறிதுநேரம்
கைவிலங்கு அளித்துவிட்டு குழந்தையின் கொஞ்சி பேசச்சொல்லலாம்.
௧௨) புன்னகையும், புத்தகங்களையும் மட்டும் பரிசாக கொண்டு வரச்சொல்லலாம்.
௧௩) குழந்தையின் கையால் மரகன்று/ மரகன்றுகளை நடலாம்.
௧௪) மேலும் விருந்தினருக்கு எண்ணற்ற சுலபமான விளையாட்டுப் போட்டிகளை
நடத்தி நட்பையும், உறவையும் மேம்படுத்தலாம்.
௧௫) வரும் விருந்தினருக்கு மரகன்றுகளை சுற்றுசூழல் காக்க உதவும்
துணிபைகளில் கொடுக்கலாம்.
உணவு
௧) கச்சாயமும், கல்லைஉருண்டையும்
இன்னிப்பாகக்கொடுக்கலாம்.
௨) அன்றுகறந்த மாடு/ ஆட்டு பாலில் சர்க்கரை கலக்காமல் வெதுவெதுப்பாகக் கொடுக்கலாம்.
௩) பாசிப்பயிர்
கடைந்து களிசாதத்துடன் சாப்பிடக்கொடுக்கலாம்
௪)அரசிமுருக்கையும்,
முருங்கைகாயையும், எண்ணெய்படாமல் வருத்த கீரையுடன் அத்துடன் கடிக்கக்கொடுக்கலாம்.
௫)சோள/கம்பு தோசை,
ராகிசேவை, மக்காசோள பணியாரம், கம்பு தயிர்சாதம் என்று பலவகையான பாரம்பரியஉணவுகளும் உடலுக்கு
மிகவும் நல்லத்து.
௬) மோரும், இளநீரும்
நீங்கள் நினைப்பதுபோல நல்லதொரு பானம்தான்.
இந்தமாதிரி சிறுசிறு முயற்சிகள்தான் நாளைய சமூகத்திற்கு அடித்தளம்.
இந்தமாதிரி சிறுசிறு முயற்சிகள்தான் நாளைய சமூகத்திற்கு அடித்தளம்.
No comments:
Post a Comment