Saturday, August 18, 2012

மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சகாயம் அவர்களின் சீரிய முயற்ச்சியில் வேளாண்துறையில் ஒரு புதிய சகாப்தம்.......

  நேற்றைய முன்தினம் மதுரையில் மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சகாயம் அவர்களின்  உன்னதமான முயற்ச்சியில் உருவாக்கி இருக்கும் "உழவன் உணவகம்" காணும் அறிய வாய்ப்பு தம்பி மாதவன் விஜயராஜன் மூலம் கிட்டியது.அப்போது மதுரை மாவட்ட ஆட்சிதலைவர்  திரு. சகாயம் அவர்களின்  நேர்முக உதவியாளர் திரு. ஜெய்சிங் ஞானதுரைஇ வேளாண் அதிகாரிகள் திரு ஆறுமுகம் மற்றும் பேராசிரியர் திருமாறன். ஆகியோருடன் கலந்துரையாடும் அருமையான வாய்ப்பும் கிட்டியது அங்கெ கண்டவற்றை உங்களோடு பகிர்வதில் பெருமிதம் கொள்கிறேன்....
மதுரை மாவட்ட ஆட்சிதலைவர் திரு. சகாயம் அவர்களின் நேர்முக உதவியாளர் திரு. ஜெய்சிங் ஞானதுரைஇ வேளாண் அதிகாரிகள் திரு ஆறுமுகம் மற்றும் பேராசிரியர் திருமாறன். மற்றும் தம்பி மாதவன் விஜயராஜனுடன் நான்.

                  தம்பி மாதவன் விஜயராஜன் இந்த உணவகம் பற்றி என்னிடம் தொலைபேசியில் கூறி மதுரை வரும்போது கண்டிப்பாக என்னை வந்து பார்க்குமாறு சொன்னதால் கடந்த 31.10.2011 திங்கட்கிழமை அன்று மதுரை சென்று மாதவனோடு அந்த உணவகம் இருக்கும் நாராயணபுரம்  சென்றோம் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை உணவகம் இயங்குகிறது, கடந்த பல ஆண்டுகளாக யாருக்குமே பயனின்றி இருந்த வேளாண்துறைக்கு சொந்தமான இடத்தில் தான் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது,மாவட்ட ஆட்சி தலைவரின் முயற்ச்சியால் வீணாக இருந்த அந்த இடம் தற்போது சுத்தம் செய்யப்பட்டு உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. தம்பி மாதவன் எனக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் திரு. ஜெய்சிங் ஞானதுரைஇ வேளாண் அதிகாரிகள் திரு ஆறுமுகம் ஆகியோரை அறிமுகபடுத்தி வைத்தார், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் திரு. ஜெய்சிங் ஞானதுரை அவர்கள் இந்த உணவகம் குறித்து பல தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண்டார், மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சகாயம் அவர்கள் இந்த உணவகம் அமைய எடுத்துக்கொண்ட சிரத்தை என்னிடம் விளக்கினார், இது போன்ற உணவகங்கள் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விரிவு செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் இயற்கை உணவு குறித்த விழிப்புணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்றும் ஆட்சி தலைவர் விருப்பப்படுவதாகவும் சொன்னார். சரி என்னதான் நடக்கிறதென்று உணவகத்தின் உள்ளே சென்று பார்ப்போமா......
                               
                       இயற்கை நறுமணங்கள் உள்ளே நடக்கும் சமையல் வாசனையில் தெரிந்தது சுவாசத்தில் மகிழ்ந்தபடி உள்ளே நுழைந்தோம், வழக்கமாக ரோட்டோர கடைகளில் கல்தோசை சுடுவதுபோல் சுட்டு கொண்டிருந்த இடத்தின் அருகே சென்று பார்த்த பொது தான் தெரிந்தது அது வழக்கமான தோசை இல்லை என்பது..ஆம் அந்த தோசையில் கலக்கபட்டிருந்தது பல விட்டமின்கள் அடங்கிய காய்கறிகள் அதற்க்கு பெயர் வெஜிடபிள் தோசையாம், மற்றொரு புறம் இன்னொருவர் பால்கோவா கிண்டி கொண்டிருந்தார் அருகில் சென்று சாதாரண பால்கொவாவிற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றோம் அதற்க்கு அவர், இது பிரத்தியேகமாக எனது பண்ணையில் சற்றுமுன் கறந்த பாலில் எந்தவித கலப்படமும் இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லி ருசி பார்க்க எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தார், உண்மையிலே மிக சுவையாக இருந்தது, சற்று நகர்ந்து வேறொரு இடம் சென்று பார்த்தோம் வீட்டில் சுடும் அதே தோசை கல்லில் தோசை ஊற்றி கொண்டிருந்தார் ஆனால் மாவோ பச்சை நிறத்தில் இருந்தது அவரிடம் கேட்டதில் இது கறிவேப்பிலை தோசை என்றார் இதே போல் வேறு பல நல்ல மூலிகைகளையும் அரைத்து தோசை சுடுகிறோம் என்றார். அடுத்து ஒருவர் பலகாரக்கடையில் விற்கும் சேவு பாக்கட்டில் அடைத்து விற்று கொண்டிருந்தார் இதென்ன வழக்கமான சேவு தானே என்று வினவியதில் அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது, இது கடலை மாவில் செய்த சேவு இல்லை பிரத்தியேகமாக திணை அரிசி இடித்து அதன் மூலம் செய்கிறோம் இதில் என்னை கொஞ்சமும் தங்காது குழந்தைகள் முதல் வயோதிகர் வரை எவ்வளவு சாப்பிட்டாலும் வயிற்ருக்கு ஒரு பாதகமும் வராது என்றார்.
                          
                          அடுத்து ஒரு மேசையில் பெண் ஒருவர் குழிப்பணியாரம் சுட்டு கொண்டிருந்தார் இதை எல்லாம் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகின்றது என்ற என்ன ஓட்டத்தினிடையே அவரிடம் சென்று இதை பற்றி வினவினோம்.குழிப்பணியாரம் மட்டும் அல்ல பால் கொழுக்கட்டை மற்றும் கேழ்வரகு தோசை, கேழ்வரகு இட்லி போன்ற வகைகளை சுட சுட செய்து தருவதாக கூறி அதையும் ருசி பார்க்க கொடுத்தார்...ஒரு நிமிடம் மதுரையிலேயே தங்கிவிடலாமா என்று என்ன தோன்றியது அவ்வளவு ஆரோக்கியமான, ருசியான உணவை சுவைத்தபின், இதே உணவு வகைகள் சென்னையில் கிடைக்குமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என்ன தோன்றியது, மாவட்ட ஆட்ச்சிதலைவர் சகாயம் அவர்கள் எடுத்த இந்த முயற்சி விரைவில் தமிழகம் எங்கும் நிறுவப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

                         இன்னும் ஏகப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் அங்கு கிடைக்கிறது உதாரணத்திற்கு பால் கொழுக்கட்டை, சுவியம், கேழ்வரகு சப்பாத்தி, கேழ்வரகு தோசை, சப்பாத்தி வகைகள், திணை அரிசியில் செய்த தோசை இன்னும் சொல்லி கொண்டே போகலாம், இதை விட சிறப்பு என்னவென்றால் நமது பாரம்பரிய உணவை பாரம்பரிய சூழலில் உண்பது தான், ஆம் அதற்கான எர்ப்பாடுகளையும் செய்திருக்கிறார்கள் அங்கே, பாரம்பரிய காயிற்று கட்டில் போடப்பட்டு அதில் உட்க்கார்ந்து உன்ன ஏற்ப்பாடு செய்திருக்கிறார்கள் அது போல் நமது கிராமத்து வீட்டில் உள்ளது போல் உரி தொங்கி கொண்டிருக்கிறது, அதிலிருந்து உணவை எடுத்து பரிமாறுவது நம்மை கிராம சூழலுக்கே கொண்டு செல்கிறது.

                             முக்கியமான  ஒரு தகவலை இங்கே குறிப்பிட்டு ஆக வேண்டும், இங்கே விற்பனை செய்யும் அனைவருமே விவசாயம் சம்பதபட்டவர்களே, இங்கு உணவு பொருள் விற்பனை செய்ய ஒரே ஒரு தகுது விற்பனை செய்பவரின் குடும்பம் விவசாய குடும்பமாக இருக்க வேண்டும் என்பதே, அவரவர் கொண்டு வந்து விற்பனை செய்யும் பொருளை அவரவர்களே விற்பனை செய்து கொள்ளலாம் இதில் எந்த கட்டணமோ வாடகையோ இல்லை, விவசாயிகள் நலம் பேணப்பட வேண்டும் என்பதும், நமது கலாச்சார பாரம்பரிய உணவு வகைகள் மறக்கடிக்க படாமல் புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும் என்பதே மாவட்ட ஆட்சி தலைவரின் ஒரே குறிக்கோளாகும்.அவரின் இந்த சீரிய முயற்ச்சிக்கு மதுரை மக்கள் அமோக ஆதரவு தருவதை கண்கூடாக காண முடிந்தது, குடும்பம் குடும்பமாக வந்து உணவு வகைகளை ருசித்து சாப்பிடுகிறார்கள், அதிலும் வயது வித்தியாசம் இன்றி உணவு அருந்துவதை நேரடியாக காண முடிந்தது.குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை வந்து ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள்.

                           இது  போன்ற உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவகங்கள் தமிழகம் எங்கும் விவசாயிகள் மூலமே நடத்தப்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும், இதற்க்கு தமிழக அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தமிழகம் எங்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த ஆவன செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை கேட்டு கொள்கிறோம், இது வரை அரசு சிறந்த ஆதரவை தந்து கொண்டு இருக்கிறது அதற்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் குறிப்பாக இந்த உணவகத்தை துவங்கி வைத்து மாவட்ட ஆட்சி தலைவரின் இந்த முயற்ச்சியை வெகுவாக பாராட்டி சென்ற தமிழக கூட்டுறவு துறை அமைச்சர். மாண்புமிகு செல்லூர் ராசு அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம், மேலும் தமிழகம் எங்கும் இது போன்ற உழவன் உணவகங்களை துவக்க ஆவன செய்யுமாறு கோரிக்கையும் வைக்கிறோம்.

                               இந்த உழவன் உணவகத்திற்கு என்னை அழைத்து சென்று இது பற்றி விபரங்களை எனக்கு வழங்கிய அருமை தம்பி மாதவன் விஜயராஜனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி...இதை காணும் அனைவரும் தங்களது மேலான கருத்துக்களை முன்வைக்குமாரி கோரிக்கை வைக்கிறேன், தங்களின் பின்னூட்டங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் மூலம் தமிழகம் எங்கும் இது போன்ற ஒரு உணவகம் துவக்கப்பட எதுவாக அமையும்...நன்றி...நன்றி....நன்றி....





உழவன் உணவகம் துவக்க விழாவில் அமைச்சர் செல்லூர் ராசு அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் அருகில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. சகாயம் அவர்கள்.
மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு சகாயம் அவர்கள் கிராம சூழலில் அமைக்க பட்டுள்ள உரியினை ஆர்வமுடன் கண்டு ரசிக்கிறார்.


https://www.facebook.com/notes/vasanthakumar-graphicdesigner/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/265230453514385

4 நவம்பர் 2011, 09:21 க்குஇல் Vasanthakumar Graphicdesignerஆல் எழுதப்பட்டது


No comments:

Post a Comment