Tuesday, December 27, 2016

குழந்தைகளுக்கு கதை சொல்ல விரும்புவர்களுக்கு

அன்பில்லாமல் இந்த உலகில் எதுவுமே சாத்தியமாகாது ,மாணவர்களுக்கு அன்பு வழியில் செலுத்தப்படுகிற அறிவே தேவைப்படுகிறது ,அன்பின் பாதை எனக்கு தெளிவாக தெரிகிறது,அதில் நம்முடைய குழந்தைகளை பயணிக்க அனுமதிப்போமா ? இல்லை நம்மை போலவே அவர்களும் வருங்காலத்தில் கஷ்டங்களையும் ,சித்திரவதைகளையும் அனுபவிக்க விரும்புவோமா ? உலகில் எல்லாவற்றையும் வெல்லக்கூடிய ஆற்றல்கொண்ட அன்பினை நமது குழந்தைகளின் மீது செலுத்துவோமானால் ,குழந்தைகளுக்கு நாம் கொடுக்க விரும்புகிற பெரிய பரிசை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று நம்பிய பெட்ரண்ட் ரஸ்ஸல் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, தத்துவார்த்தமாக எழுதிய கல்வி,சமூகம் ,வாழ்க்கை சார்ந்த நூல்களிலிருந்து பெறப்பட்ட கருத்துகள் தான் இன்றைய சமூக சூழலில் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கதைகளை சொல்ல வேண்டும் ? என்ன மாதிரியான திரைப்படங்களை காட்சி படுத்த வேண்டும் ? என்ற கேள்விகளுக்கு சரியான பதிலாக இருக்கிறது .

ரஸ்ஸலின் EDUCATION AND THE GOOD LIFE நூலிலிருந்து ஒரு பகுதியை குழந்தைகளுக்கு கதைகளை சொல்ல விரும்புவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும் இன்று நான் நம்புவதால் இங்கே பதிவு செய்கிறேன் .

குழந்தைகளுக்கு நாம் சிறுவயதில் சொல்லுகிற மாயஜால கதைகள், சாகச கதைகள் நேரடியாக குழந்தைகளுக்கு எந்தவித கொடூரங்களையும் அறிமுகப்படுத்துவதில்லை ,குழந்தைகள் அக்கதையை படிக்கும் போதோ,கேட்கும் போதோ அவர்கள் எதார்த்த உலகுடன் அக்கதைகளில் நடக்கும் நிகழ்வுகளை பொருத்தி பார்க்காமல் கதைகளை படிப்பதிலும்,கேட்பதிலும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.ஆனால் குழந்தைகள் வளர வளர தான் பிரச்சனைகள் ஆரம்பிக்கும்,எதார்த்த உலகில் நடக்கிற கொடூரங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம ஆகும் போது நாம் மிகுந்த கவனுத்துடன் அணுக வேண்டும்.கதைகளை சொல்லும் போது கொடூரங்களை செய்பவனை விடுத்து,அக்கொடூரங்களால் பாதிக்கப்பட்டவன் மாதிரி தன்னை அக்குழந்தை உணர்கிற மாதிரியான நிகழ்ச்சிகள் நிறைந்த கதைகளை சொல்ல வேண்டும்.இல்லைஎன்றால் அவனுக்குள் இருக்கும் இன்னொரு கூறு அவனை கொடூரங்களை செய்பவன் போல நினைத்து மகிழ்ச்சி கொள்ள வைக்கும். இந்த கூறுகளை கொண்ட கதைகள் அக்குழந்தையை ஒரு சர்வாதிகாரியாக மாற்றிவிடும் .இதைவிட குழந்தைகளுக்கு மற்றவர்களின் மீது இரக்கத்தை தூண்டுகிற கதைகளை சொல்லலாம்.அதே நேரத்தில் மனிதர்கள் எத்தகைய கொடூரங்களையும் செய்ய தயங்காதவர்கள் என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்கக்கூடிய கதைகளை சொல்லலாம் .

வரலாறு சம்பந்தமான கதைகளை சொல்லும் போது அதன் அவலங்களை மறைக்காமல் சொல்ல வேண்டும்.போர் பற்றிய நிகழ்வுகளை சொல்லும் போது வெற்றி அடைந்தவனை பற்றி பேசாமல் போரில் பலியான மனிதர்களின் மீது இரக்கம் ஏற்படும்படி நடுநிலையாக இருக்கும் நிகழ்வுகளை சொல்ல வேண்டும்.அந்த போரில் பங்குபெற்ற அனைவரும் அற்பமானவர்கள் என குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.பிறகு அவர்கள் போரையும் அற்பமானது என்று உணர்ந்து கொள்வார்கள்.

இடையில் எதாவது குருரமான நிகழ்வுகள் வந்தால் அதை மறைக்காமல் குழந்தைகளுக்கு விளக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் குறித்த நம்முடைய அற உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். அப்படி குருரமாக நடந்து கொள்பவர்கள் மடையர்கள் ,அற்பமான மனிதர்கள் ,அவர்கள் யாரும் சரியாக வளர்க்க படாதவர்கள் என்பதை உணர்த்த வேண்டும்.இத்தகைய குரூரம் செய்பவர்கள் மீது கோபம் வராமல் ,அவர்கள் வாழ்க்கையில் எது மகிழ்ச்சி என்று அறியாத முட்டாள்கள் என்பதை புரிய வைக்க வேண்டும் ,

குழந்தைகளிடம் நற்குணங்களை செலுத்துவது அறிவு பூர்வமான பணி, அதற்கான திசை வழியில் நாம் அதிகமாகா கவனம் செலுத்த வேண்டும்.அவர்களுக்கு வாழ்க்கையுடன் அறிவுக்கும.அன்பிற்கும் இருக்கிற பிணைப்பை சொல்ல வேண்டும்,அந்த அன்பினால்,அறிவாற்றலால் உலகையே அவர்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை தர வேண்டும் ..

Sakthivel - FB

No comments:

Post a Comment