3000 மகன்கள், ஒரு தந்தை
ஒரு மனிதர், 3000 மரங்களுக்கும் மேல் வளர்த்துவருகிறார் என்ற செய்த்தியை புதியதலைமுறை புத்தக்த்தில் படித்ததிலிருந்து, அவரை அவசியம் சந்திக்க வேண்டுமென்று தோன்றியது. அவரை நானும் நண்பர் பெரியசாமியும், நேற்று 12.12.2009 சத்தியமங்கலத்தில் அவரது வீட்டில் சந்தித்தபோது எடுத்தசில புகைப்படங்கள்.
thanks:source from -http://eniyoruvithiseivom.blogspot.com/2009/12/3000.html
வாய்க்காலின் நடுவிலே வளர்த்து விட்டமரம்.
நான் எண்ணிய வரையில் இது 63வது மரம்.
மரங்கள், பச்சை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மரங்கள் மட்டுமே..
கால்வாயின் இரண்டு பக்கங்களிலும் மரங்கள், மரங்கள், மரங்கள்தான்
இந்த மேற்குத்தொடர்ச்சி மரத்தொடர் இப்படியே இன்னும் மூணரை கிலோமீட்டர்வரை தொடர்கிறது.
சுமார் 8000 மரங்களுக்கும் மேல் தனியாளாக நட்டு, காத்து வளர்த்த மனிதர், அய்யாச்சாமி.
அவர், அவரது பேரன் மற்றும் துணைவியார்.
குக்கூ குழந்தைகள் வெளி என்கிற அமைப்பு அவருக்குக் கொடுத்த பட்டயம். இந்த படத்தில் தன்னை அழகாக காட்டியிருக்கிறார்கள், என்று வெகுளியாக சிரித்தார்...









No comments:
Post a Comment