Saturday, May 13, 2017

மார்ட்டின் லூதர் கிங் பொன்மொழிகள்

பூ.கொ. சரவணன்

வாழ்க்கையின் மிக முக்கியமான, அவசரமான கேள்வி இதுதான்: 'மற்றவர்களுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'
நான் அன்போடு வாழ முடிவு செய்துவிட்டேன். வெறுப்பு சுமக்க முடியாத பெருஞ்சுமை.
பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியவில்லை என்றால் நடங்கள். நடக்க முடியவில்லை என்றால் தவழுங்கள். எப்படியாவது முன்னேறிக் கொண்டே இருங்கள்.
உங்களுக்கு ஏற்படும் ஏமாற்றத்தை அழியாத, எல்லையில்லாத நம்பிக்கையால் எதிர்கொள்ளுங்கள்.
பெரிய விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்றாலும், சிறிய விஷயங்களைப் பெரிய அளவில் என்னால் செய்ய முடியும்.
ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் அன்பு, வெறுப்பு எனும் இரு காளைகள் சண்டையிடுகின்றன. எது வெல்லும்? எதற்கு அதிகத் தீனி போடுகிறீர்களோ அதுவே ஜெயிக்கும்.
வைரம், வெள்ளி, தங்கத்தை விட அழகும், மதிப்பு மிகுந்தது உண்மையான சகோதரத்துவம்.
நம்பிக்கையோடு முதல் அடியை எடுத்து வையுங்கள். முழுப் பாதையும் தெரியவில்லை என்றாலும் முதல் அடியை நம்பிக்கையோடு எடுத்து வையுங்கள்.
உண்மையான கல்வியின் இலக்குகள் அன்பும், பண்பும் ஆகும்.
அன்பே எதிரியை தோழன் ஆக்கும் ஒரே சக்தி.
எதோ ஒரு இடத்தில் நிகழும் அநீதி உலகெங்கும் உள்ள நீதிக்கு ஆபத்தாகும்.
பிறரை அடக்கும் அதிகாரம் வேண்டாம். நமக்குத் தேவை அறம், நேர்மை, நன்மை தரும் அதிகாரமே ஆகும்.
கோபம் வருகிற பொழுது இசையுங்கள், எழுதுங்கள், பிரார்த்தியுங்கள், பாடம் நடத்துங்கள். இவை உங்களின் கவனிப்பை கூர்மையாக்கும்.
நமக்கான மாற்றம் அவசரத்துக்கு ஓடி வராது. முடிவில்லாத போராட்டத்தின் மூலமே மாற்றம் ஏற்படும்.
வெறுப்பை நம்பிக்கை,அடக்கம் மிகுந்த அன்பால்
எதிர்கொள்ளுவோம்.
சரியானவற்றைச் செய்ய எந்நேரமும் சரியான நேரமே.
முதிர்ச்சியின் முக்கியமான பண்பு தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது ஆகும்.
வெறுப்பு வாழ்வை முடக்கும்; அன்பு விடுவிக்கும். வெறுப்பு குழப்பும்; அன்பு அமைதிப்படுத்தும். வெறுப்பு வாழ்வை இருட்டாக்கும்; அன்பு வாழ்வை ஒளிர வைக்கும்.

No comments:

Post a Comment