Saturday, May 13, 2017

என் ELECTION MANIFESTO இது தான்


Suresh Jegannathan
கடந்த வார நீயா நானாவில் நான் பேசிய மற்றும் பேச விரும்பிய என்  ELECTION MANIFESTO இது தான்.
1.இந்தியாவில் உள்ள எல்லோருக்கும் உத்தரவாதமான முழு நேர அல்லது பகுதி நேர வேலை . இதற்கு Govt-Private-Public Employment Skill Mapping என்ற முறையின் மூலம் skilled – Semi skilled – unskilled என்று வேலையையும் வேலையாட்களின் தகுதியையும் பிரித்து , அதை digitalised mapping செய்து , அரசே தனியார் மூலம் அனைவருக்குமான பகுதி நேர வேலையை தரலாம்.
2.அனைத்து பள்ளிகளிலும் P.Ed , Spoken English போல Moral classes கட்டாயமாக்குவது. (குறைந்து வருகின்ற moral values ஐ பள்ளியிலிருந்தே மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ).
3.அதை பயிற்றுவிக்க தமிழ் பட்டதாரிகளை நியமிப்பது. (தமிழ் படித்தவர்களுக்கு வேலை கொடுப்பதன் மூலம் மட்டுமே மொழியை வளர்க்க முடியும் என்று நம்புகிறேன் )
இந்தியாவில் பொருட்களின் விலையேற்றத்திற்கு most poorly handled supply chain management ஒரு காரணம் என்று நம்புகிறேன். அதனால் அரசு தனியாக ஒரு SCM துறையை உருவாக்க வேண்டும். அதன் மூலம் சரியான இடங்களில் warehouse ஐ locate செய்து , அதை தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம் வருவாயும் ஈட்டலாம்.
4.Postal Dept ஐயும் நூலகங்களையும் இணைக்கலாம். அதாவது அனைத்து நூலக நூல்களையும் digitalise செய்து website இல் நூல் , எழுத்தாளர் , தலைப்பு வாரியாக ஏற்றலாம். பின் வாடிக்கையாளர் விரும்பும் புத்தகங்களை அருகிலுள்ள நூலகத்தில் பெற்று Postal Dept delivery செய்யலாம்.இதற்கு delivery charges ஐ govt பெற்றுக் கொள்ளலாம்.(similar to FLIPKART )
5.இந்தியாவின் அனைத்து ஆறுகளையும் சுத்தம் செய்து , அதை boating மற்றும் சுற்றுலா தலமாக மாற்றி அதன் மூலம் வருவாய் ஈட்டலாம்.
6.அரசே software நிறுவனங்கள் தொடங்கலாம்.
7.பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளை தேசத்தின் முதல் குற்றமாக அறிவித்து அதற்கேற்ற சட்ட வரைவுகளை திருத்த வேண்டும்.
8.தமிழகத்தில் இவற்றின் மூலம் வருவாய் ஈட்டி tasmac கடைகளை மூடலாம்.
9.வீணாகின்ற பிளஸ்டிக் கழிவுகளை சேகரித்து , திடமான பிளாஸ்டிக் சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.
கழிவுகள் மற்றும் கழிவு நீர் மேலாண்மையில் மனிதர்களை அப்புறப்படுத்தி இயந்திரங்களை பயன்படுத்துவதை சட்டமாக்க வேண்டும்.
10.தற்கொலை முயற்சிக்கு செல்லும் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அரசே வாங்கி , அரசு விவசாய தொழிளாலர்கள் மூலம் விவசாயத்தை அரசே தொடர வேண்டும்.

No comments:

Post a Comment