Arivazhagan Kaivalyam, Extreme Casteism displayed by the local leaders of any Dravidian Political party is the primary threat to "Periyarism" today. than Brahmanism.
உணர்கிறார்.
நாட்டார் வழிபாட்டு முறை என்பது, "காரல் மார்க்ஸ்" சொன்ன சரணடைதல் கோட்பாட்டுக்குள் இயல்பாகப் போவது, கருவறைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கிற சிலை வழிபாடு என்பது வலிந்து சரணடைய வைப்பது, அல்லது முகவர்கள் மூலமாக இறை நம்பிக்கையை நுகர்வாக்குவது. ஒரு குறிப்பிட்ட எல்லையில், பெரியார் இந்த நுட்பமான வேறுபாட்டை அறிந்தவராகவே இருந்தார். எளிய மக்களின் நாட்டார் வழிபாட்டு நம்பிக்கைகள் மீது அவர் கைவைக்காமல் இருந்ததற்குக் காரணம், நுகர்வோ, முகவர்களோ இல்லாத ஒரு இயல்பான நம்பிக்கையாக அது இருந்ததே காரணமாக இருக்கக் கூடும்.
பெரியார் என்றில்லை, அவரை விடச் சிறந்த பகுத்தறிவுவாதப் புரட்சியாளர்கள் வந்தாலும் கடவுள் என்கிற கோட்பாட்டை முற்றிலுமாக நீக்கி விட முடியாது, ஏனெனில், அது ஒரு சுமை இறக்கி வைக்கப்படுகிற நடுகல், மானுடத்தின் குழப்பங்களும், வாழ்வியலின் தீராத வாதையும் உயிரை உருக்கி வடிக்கப்படும் குழம்பைப் போல ஒவ்வொருநாளும் வடிந்து கொண்டே இருக்கிறது, அதைத் துடைத்துக் கொள்ளவும், இளைப்பாறவும் மனிதன் கடவுள் என்கிற கோட்பாட்டை விரும்பி ஏற்றுக் கொள்கிறான், அவனுடைய தன்முனைப்பால் விளைகிற தீமைகளையும், குற்றங்களையும் கடவுளின் மீது எறிந்து விட்டுத் தப்பித்து ஓடுகிறான்.
மானுட வரலாற்றில் கடவுள் என்கிற ஒரு பொய்யான கற்பனைக் கருவி இல்லையென்றால், சிதிலமடைந்த, குற்றங்களால் நிரம்பிய இன்னும் நலிந்த சமூகத்தையே நாம் கண்டடைய நேர்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாம், கூட்டு சமூக மனத்தின் ஆழ்மன எல்லைகளை நோக்கி வைக்கப்படுகிற விவாதங்கள்.
ஆனால், பெரியார் அப்படியான ஒரு உளவியல் ஆய்வு நோக்கில் கடவுள் மறுப்புக் கொள்கையை முன்வைக்கவில்லை, அவரது மிக எளிமையானது, ஒருவேளை கடவுளாக உங்கள் எதிரே வந்தால்?, என்றொரு கேள்விக்கு அவர் சொன்னது "எல்லாரையும் போல, ஐயா சாமின்னு கும்பிட்டுவிட்டுப் போயிட்டே இருப்பேன்".
அவருக்கு கடவுள் மேலிருந்த தீராத சினம், உண்மையில் கடவுள் மேலானதா என்று கூட எனக்கு ஒரு ஐயம் உண்டு, கடவுளின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மானுடவியலுக்கு எதிரான வரைவுகளையும், கற்பிதங்களையுமே அவர் காலம் முழுவதும் எதிர்த்தார். அவர் கடவுளுக்கு எதிரானவர் என்று சித்தரிக்கப்பட்டதே வெகுமக்களை அவருக்கு எதிராகத் திசை திருப்ப முயன்ற பார்ப்பனீயத் திட்டம். அவர் கடவுளுக்கு எதிரானவர் தான், ஆனால், அதை விட முக்கியமாக அவர் மக்களுக்கு நெருக்கமானவர். மானுடத்துக்கு நெருக்கமானவர்.
பெருமாள் மணியைப் போன்ற தமிழ் மறைச் சிந்தனை வழி நிற்பவர்கள், ஊடகங்களில் பெரியாரை உரத்த குரலில் முன்னிறுத்தும் போது, கற்பனைக் கடவுளர்க்கும், அவரைப் பின்தொடரும் எளிய உழைக்கும் மக்களின் நீதியின் பாலான நம்பிக்கைகளுக்கும் பெரியார் ஒரு அரணாகவும், விளக்காகவும் தொடர்ந்து இன்னும் பல காலங்கள் இருப்பார் என்ற நம்பிக்கை வருகிறது.
ஆனால், உண்மையில் பெரும்பான்மையான திராவிடக் கட்சிகளின் (திராவிடர் கழகம் உட்பட) மாவட்டச் செயலாளர்களுக்கும், கட்சிகளின் மூத்த நிர்வாகிகளுக்கும், பெரியாரின் அடிப்படைக் கோட்பாடுகள் கற்பிக்கப்படவும், உள்ளீடு செய்யப்படவும் வேண்டிய நிலை இருப்பது தான் கவலைக்குரியதாகவும், சமூக அநீதியாகவும் இருக்கிறது.
### பார்ப்பனீயத்தை விடக் கொடிய நஞ்சு இந்த வீட்டுச் சோற்றில் கலக்கப்பட்ட நஞ்சு # # #
Arivazhagan Kaivalyam
Arivazhagan Kaivalyam
தமிழ் ஒரு "Primitive Language" என்றும், புனிதப்படுத்தப்படுகிறது என்றும் தொடர்ந்து விவாதங்களில் பேசி வருகிறார் திரு.பெருமாள் மணி, அதற்காக அவர் பெரியாரையும் சில நேரங்களில் துணைக்கு அழைக்கிறார், பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறிவிட்டதாகவும் அதனால் தமிழ் சமஸ்க்ருதத்தை விட ஒரு படி குறைந்தது என்பது போலவும் தொடர்ந்து ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார்.
பெரியார் தமிழில் மலிந்து கிடந்த இறை வழிபாட்டு நிலைப்பாட்டினைச் சாடவும், அத்தகைய நிலையிலிருந்து விடுபட்டு அறிவியல் மொழியாக மாற்றம் காண வேண்டும் என்கிற உயரிய நோக்கிலேயே அப்படிச் சொன்னார், அவரது பல்வேறு உரைகளிலும், எழுத்துக்களிலும் தமிழில் அறிவியலை உள்ளீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஒரு மிகப்பெரிய மொழி ஆய்வாளரைப் போல உணர்த்தி இருக்கிறார். ஒரு படி மேலே சென்று இன்றைய கணினி உள்ளீடுகளுக்குப் பொருந்தும் வகையிலான ஒரு சொற்கட்டமைப்பை தந்தை பெரியாரே உருவாக்கினார் என்பது வரலாறு.
திரு. பெருமாள் மணியின் வாதங்களில் ஒன்று தமிழில் காலம் மூன்றே வகைப்படும் என்பது, உண்மையில் தமிழில் ஏனைய மொழிகளை விட காலங்களைக் வெகு நுட்பமாகக் குறிக்க வாய்ப்பிருக்கிறது, பன்னிரண்டு கால அளவீடுகளைத் தாண்டித் தமிழில் இன்னும் சில உயர் பயன்பாட்டுக் கால வகைகளை நம்மால் உறுதியாகக் குறிக்க முடியும். உலகின் எந்த மொழியில் குறிக்கப்பட்டிருக்கும் காலப் பயன்பாட்டு சொற்றொடர்களையும் தமிழில் மொழி பெயர்க்க இயன்றிருப்பதே இதற்கான சான்று.
பெருமாள் மணிக்காக மீண்டும் ஒருமுறை தமிழ் மற்றும் ஆங்கில அடிப்படை இலக்கணத்தை இங்கே பதிவு செய்ய வேண்டிய நெருக்கடி உருவானதற்காக வருந்துகிறேன்.
எளிய நிகழ்காலம் - அது வருகிறது - It comes - Simple Present
தொடர் நிகழ்காலம் - அது வந்து கொண்டிருக்கிறது - It is Coming - Present Continious
நிறைவான நிகழ்காலம் - அது வந்திருக்கிறது - It has come - Present Perfect
நிறைவான தொடர் நிகழ்காலம் - கடந்த இரண்டு மணி நேரமாக அது வந்து கொண்டிருக்கிறது - It has been coming for the last two hours - Present Perfect Continuous
தொடர் நிகழ்காலம் - அது வந்து கொண்டிருக்கிறது - It is Coming - Present Continious
நிறைவான நிகழ்காலம் - அது வந்திருக்கிறது - It has come - Present Perfect
நிறைவான தொடர் நிகழ்காலம் - கடந்த இரண்டு மணி நேரமாக அது வந்து கொண்டிருக்கிறது - It has been coming for the last two hours - Present Perfect Continuous
எளிய இறந்தகாலம் - அது வந்தது - It came - Simple Past
தொடர் இறந்த காலம் - அது வந்து கொண்டிருந்தது - It was coming - Past Continious
நிறைவான இறந்தகாலம் - அது வந்திருந்தது - It had come - Past Perfect
நிறைவான தொடர் இறந்தகாலம் - கடந்த ஆண்டு இதே நாளில் இரண்டு மணி நேரமாக அது வந்து கொண்டிருந்தது - It had been coming - Past Perfect Continuous
தொடர் இறந்த காலம் - அது வந்து கொண்டிருந்தது - It was coming - Past Continious
நிறைவான இறந்தகாலம் - அது வந்திருந்தது - It had come - Past Perfect
நிறைவான தொடர் இறந்தகாலம் - கடந்த ஆண்டு இதே நாளில் இரண்டு மணி நேரமாக அது வந்து கொண்டிருந்தது - It had been coming - Past Perfect Continuous
எளிய எதிர்காலம் - அது வரும் - It will come - Simple Future
தொடர் எதிர்காலம் - அது வந்து கொண்டிருக்கும் - It will be coming - Future Continuous
நிறைவான எதிர்காலம் - அது வந்திருக்கும் - It will have come - Future Perfect
நிறைவான தொடர் எதிர்காலம் - அது வந்து கொண்டு இருந்து இருக்கும் - It will have been coming - Future Perfect Continuous.
தொடர் எதிர்காலம் - அது வந்து கொண்டிருக்கும் - It will be coming - Future Continuous
நிறைவான எதிர்காலம் - அது வந்திருக்கும் - It will have come - Future Perfect
நிறைவான தொடர் எதிர்காலம் - அது வந்து கொண்டு இருந்து இருக்கும் - It will have been coming - Future Perfect Continuous.
இலக்கணத்தில் சுட்டப்படும் நிறுவல்களைத் தாண்டி ஒரு மொழி ஏனைய மொழிகளின் காலச் குறிப்புகளை எத்தனை நுட்பமாகப் பயன்படுத்துகிறது அல்லது மொழி பெயர்க்கிறது என்பதில் தான் ஒரு மொழியின் உண்மையான தொன்மையும், கட்டமைப்பும் அடங்கி இருக்கிறது. ஆக, திரு. பெருமாள் மணி போன்ற இந்துத்துவர்களுக்கு ஒரு சவாலாகவே இதனைக் குறிப்பிடுகிறோம், தமிழ், இறையியல் என்று மட்டுமில்லை, பண்பாட்டு வெளியிலும் கூட உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியான மொழி என்பதைத் தாண்டி உயிர்ப்பான சமூக மொழியும் கூட, இறைவனை மட்டுமில்லை, அவனது அப்பனைத் தொடர்பு கொள்ளவும், மந்திரிக்கவும் கூட எங்களுக்கு எம் தமிழ் போதுமானது.

No comments:
Post a Comment