Saturday, May 13, 2017

இட ஒதுக்கீடு




Anbe Selva
பெரியாரால் இட ஒதுக்கீடு பெற்ற காந்தி...
காந்தியடிகள் முதன் முறை சென்னை வந்தபோது சீனிவாச ஐய்யங்கார் வீட்டிற்க்கு சென்றார், பார்பனர் அல்லாதவர் காந்தியடிகள் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் மாபெரும் தலைவரை திண்ணையிலேயே உட்காரவைத்து பேசி அனுப்பினர் பார்பனர்கள்....
அதே காந்தியடிகள் மறுமுறை சென்னை வந்து அதே சீனிவாச அய்யங்கார் வீட்டிற்கு சென்றபோது கூடத்திற்குள் அழைத்து சென்று உபசரிகப்பட்டார்.
அதன் பின் பேட்டியளித்த காந்தி "திண்ணையோடு அனுப்ப பட்ட எனக்கு கூடத்திற்குள் அழைத்து பேச இடம் அய்யங்கார் வீட்டில் கிடைத்ததற்கு காரணம் ஈ.வெ.ரா. பெரியாரின் பிரச்சாரங்களே ஆகும்" என்று கூறினார்
என்றால் பெரியாரின் திராவிடத்தின் பங்கு இத்தமிழ் மண்ணிற்கும் தமிழர்களுக்கும் எவ்வளவு தேவை என்பதை ரத்த பரிசோதகர்கள் உணர்வார்களா?.

Ramalingam Kathiresan
பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்துக்கள் இல்லையா?
மண்டல்குழு பரிந்துரையின்படி மத்தியஅரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு
27% இடஒதுக்கீடு அமுலாக்கப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.ஆனால்
இப்போதும் 12%தான் அவர்களுக்கு தரப்பட்டுள்ளது! தகவல் அறியும் சட்டத்தின் கீழ்
இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது. ஆக ஏட்டளவில்தான் 27% என்றுள்ளதே தவிர
நடைமுறையில் அதில் பாதிகூட இல்லை. "இந்துக்களுக்கான கட்சி " எனக் கூறிக்
கொள்ளும் பா ஜ க வின் அரசு இதைச் சரி செய்ய முன்வருமா? அல்லது பிற்படுத்தப்
பட்ட மக்கள் இந்துக்கள் அல்ல என்பார்களா?


Anbe Selva
ஆளுனர்களில் 30 பேர் அதில் பிராமணர்கள் 13 பேர்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர் அதில் பிராமணர்கள் 9 பேர்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர் அதில் பிராமணர்கள் 166 பேர்
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர் அதில் பிராமணர்கள் 58 பேர்
பல்கலைகழக துணைவேந்தர்கள் 98 பேர் அதில் பிராமணர்கள் 50 பேர்
மாவட்ட நீதிபதிகள் 438 பேர் அதில் பிராமணர்கள் 250 பேர்
கலெக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300 பேர் அதில் பிராமணர்கள் 2376 பேர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர் அதில் பிராமணர்கள் 190 பேர்
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர் அதில் பிராமணர்கள் 89 பேர்
-குஷ்வந்த் சிங் (சண்டே 23-29 டிசம்பர் இதழ் )
மொத்த மக்கள்தொகையில் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள் இடஒத்துக்கீடுக்கு எதிராக ஏன் கிளர்ந்தெழுந்து பிறரை தூண்டி விடுகின்றனர் ? இடஒத்துக்கீடுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கின்றனர் என இப்போது புரிகிறதா ?
மேற்கண்ட பதவிகள் எதுவும் திறமைகள் மட்டும் இருந்தால் கிடைக்காது எல்லாமே நியமனப் பதவிகள். எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கலெக்டர் ஆக முடியாது. எல்லா வக்கீலும் நீதிபதி ஆக முடியாது. எல்லா பேராசிரியரும் துணைவேந்தர் ஆக முடியாது. எல்லா அரசியல்வாதியும் ஆளுநர் ஆக முடியாது. மேலே உள்ள எந்தப் பதவிக்கும் இட ஒதுக்கீடு கிடையாது. அதனால் அவர்கள் அனைவரும் திறைமையால் மட்டுமே பதவிக்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்முடைய அறியாமையின் வெளிப்பாடு.
மண்டல் கமிசன் மட்டும் இல்லையென்றால் பிராமணர்கள் தவிர வேறு எவரும் உயர்கல்வியே கற்றிருக்க முடியாது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான 18% இட ஒதுக்கீட்டில் 5 சதம் கூட முழுமை பெறவில்லை. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதம் இட ஒதுக்கீடும் முழுமை பெறவில்லை. அவை வெறும் சட்டங்களாகவே மட்டும்தான் இருக்கின்றது. இதனை செய்தியாக்க வேண்டிய ஊடகங்களிலும் அவாள் ஆதிக்கம். செயல்படுத்த வேண்டிய அரசின் உயர் மட்டத்திலும் அவாள் ஆதிக்கம். சமூக நீதி என்பது புரியாமல் உள்ளதன் விளைவுகள் தான் இட ஒதுக்கீடு என்றவுடன் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பது.thx siva bsp, சூச சூச
தமிழகத்தின் 69% இட ஒதுக்கீடு கேள்விக் குறியாகியிருக்கும் இந்த சமயத்தில் நாம் விழிப்புடன் இணைந்து தமிழர்கள் இந்தியாவை வென்ற இந்த ஒற்றை வெற்றியையாவது தக்கவைத்து கொள்வோம்

Eagandan Nambi Eagandan
9 மார்ச் 2015
தமிழ்நாட்டில் அரசு ஊழியளர்களாக 55 சதவீததிற்கு மேலும்,அதிகாரிகளில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேரும் பிறமொழியாளர்களே பணி செய்கின்றனர் .இது எப்படி சாத்தியம் ஆனது. அதற்குக் காரணம் திராவிடர்களின் திருட்டுத் தனமே.இடஒதுக்கீட்டை தமிழர்களுக்கு நாங்கள் தான் வாங்கிக் கொடுத்தோம் என்று சொல்லும் பெரியாரிஸ்டுகள் ,தமிழர்களுக்கு திராவிட முகமூடியை மாட்டி,தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத மலையாளிகள், கன்னடர்கள் ,தெலுங்கர்கள்,மற்றும் பிறமொழியாளர்களும் இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பயன் பெறச் செய்தது.
ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின் ஆந்திரம் தனக்கென தனியாக சட்டமன்றம் அமைத்து,,தனது மாநிலத்தில் உள்ள சாதிகளை மட்டுமே அங்கீகரித்து சட்டம் இயற்றி மற்ற மாநிலங்களைச் சேர்ந்த சாதிகளுக்கு தங்கள் மாநிலத்தில் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்து விட்டது.
இதே போல்தான் ,கேரளா ,கர்நாடகம் போன்ற மாநிலங்களிலும் நடந்துள்ளது. ஆனால் பிர்க்கப்படாத சென்னை மாகாணத்தில் இருந்த அத்தனை சாதிகளுக்கும் இளிச்சவாய்தமிழ் நாட்டில் மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நியாப்படி மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரா,கேரளா,கர்நாடக மநிலங்களைச் சேர்ந்த சாதிகளை தமிழ்நாட்டின் சாதிப்பட்டியல்களை நீக்கி இருக்கவேண்டும். ஆனால் நீக்கவில்லை.
காரணம் நம்மை திராவிடத்தின் பெயரால் ஆட்சி செய்யும் திராவிடர்களே..இந்த உண்மைகளையெல்லாமல் உணர்ந்து தமிழர்கள் தங்களுக்குள் ஒன்று பட்டு போராடாமல் விட்டுவிட்டால் இனி வரும் காளங்களில் தமிழ்ர்களுக்கு அரசு வேலை என்பது கிடைக்காமலே போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது

No comments:

Post a Comment