Neander Selvan
மக்கள் டயட்
பேலியோ டயட் எடுக்க ஆசை, ஆனால் பொருளாதார காரணங்களால் முடியவில்லை என்பவர்களுக்கு இந்த விலை குறைவான, லோ-கார்ப் முறை டயட் பரிந்துரைக்கபடுகிறது.
உங்களால் பேலியோ எடுக்க கூடிய பொருளாதார சூழல் இருந்தால் நீங்கள் அதை தொடர்வதை விட மேலான காரியம் எதுவுமில்லை. சுத்தமாக பின்பற்றவே முடியாது எனும் சூழலில் இருப்பவர்களுக்கு தான் இந்த “மக்கள் டயட்” பரிந்துரைக்கபடுகிறது.
இது ஏற்கனவே பேலியோவில் இருப்பவர்களுக்கு அல்ல, மூன்று வேளை இட்டிலி, தோசை, சப்பாத்தி, உப்புமா என எடுப்பவர்களுக்கு மட்டுமே அதற்கு மாற்றாக இது பரிந்துரைக்கபடுகிறது. இது வழக்கமான தமிழ்நாட்டு உணவை விட ஆரோக்கியமானது என்பதே நாங்கள் முன்வைக்கும் வாதமே ஒழிய பேலியோவை விட இது மேம்பட்டதல்ல.
பேலியோவில் இல்லாத சில உணவுகளை (உதா: நிலக்கடலை) இதில் சேர்த்திருக்கிறோம். அதனால் நிலக்கடலை நல்ல உணவு என ஆகிவிடாது. இட்டிலி, தோசையை விட இது மேல். அவ்வளவுதான். நிலக்கடலை சாப்பிட்டு அலர்ஜி ஆவது மாதிரி பிரச்சனைகள் இதில் சிலருக்கு வரலாம். அவர்களுக்கு வேறு மாற்றுகளை ஆராயலாம். உங்களுக்கு கடுமையான வயிற்றுவலி மாதிரி சிக்கல்கள் இருந்தால் தெரிவிக்கவும்.
நான் ஏற்கனவே பேலியோவில் இருக்கிறேன். நான் இதை பின்பற்றலாமா?
திடீர் என உங்கள் பொருளாதார சூழலில் சிக்கல் வந்திருந்தால் ஒழிய வேண்டாம்….மக்கள் டயட்டுக்கு நீங்கள் மாறினால் பேலியோவில் கிடைத்த பல நன்மைகள் மறுபடி ரிவர்ஸ் ஆகலாம். இதில் பேலியோ அளவுக்கு நன்மைகள் இல்லை.
இதன் நன்மைகள்:
எடைகுறைப்பு (பேலியோ அளவுக்கு விரைவில் ஆகும் என சொல்லமுடியாது. ஆனால் வழக்கமான உனவை விட மேலான அளவில் ஆகும்)
சர்க்கரை, பிரசர் கட்டுப்பாடு (பேலியோவை விட குறைந்த அளவுகளில் இது நடைபெறும். ஆனால் சர்க்கரை, பிரசர் இதிலும் கட்டுக்குள் வரும்)
இவற்றை தாண்டி வேறு வியாதிகளை இது குணமாக்கும் என கூற இப்போது இயலாது. இப்போதைக்கு இது ஒரு எளிய எடைகட்டுபாட்டு முறை மட்டுமே.
இதில் என்ன சாப்பிடலாம்?
முதல் 30 நாட்களுக்கான உணவுப்பட்டியல்
———
காலை: பட்டர் டீ.
+
ஆப்ஷனல்: விரும்பினால் கூட 100 கிராம் தேங்காய். (ஒரு முழு தேங்காய் 400 கிரா. ஆக 1/4 தேங்காய் சாப்பிடவேண்டும்)
ஆப்ஷனல்: விரும்பினால் கூட 100 கிராம் தேங்காய். (ஒரு முழு தேங்காய் 400 கிரா. ஆக 1/4 தேங்காய் சாப்பிடவேண்டும்)
மதிய உணவுக்கான தேர்வு 1: 200 கிராம் வேகவைத்த அல்லது வணக்கிய நிலக்கடலை. (கூட வெல்லம் சேர்க்க கூடாது)
***அல்லது***
மதிய உணவுக்கான தேர்வு 2: குட்டை அரிசி வகைகளை தவிர்த்து நீளமான அரிசி வகை ஒன்றை பயன்படுத்தவும். ஒரு சின்ன கப் (40 கிராம் சமைக்காத அரிசியை எடுத்து) குக்கரில் சமைக்காமல் திறந்த பாத்திரத்தில் ஸ்டார்ச்சை வடிகட்டி இறக்கிவிட்டு சமைக்கவும். ஸ்டார்ச்சை எடுப்பது எப்படி என தெரியவில்லை எனில் பின்னூட்டத்தில் கேளுங்கள். சொல்கிறேன்.
இப்படி சமைத்த அரிசியுடன், கருவாட்டுகுழம்பு அல்லது பேலியோ காய்கறிகுழம்பு, ஆகியவற்றை எடுக்கலாம்
மாலை: 4 முட்டை, 1/4 கிலோ பேலியோ காய்கறிகள், 100 கிராம் கீரை
வாரம் 1 நாள் (அசைவர்களுக்கு)
ஆட்டு ரத்த பொறியல்
வாரம் 1 நாள் ஆட்டு ஈரல்
————-
இதில் அனைத்து வைட்டமின்களும், மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கின்றன (100% கிடைப்பதில்லை. காமன்மேன் உணவு எதிலும் அது கிடைக்காது)
இதில் அனைத்து வைட்டமின்களும், மினரல்களும் போதுமான அளவில் கிடைக்கின்றன (100% கிடைப்பதில்லை. காமன்மேன் உணவு எதிலும் அது கிடைக்காது)
யார் இதை எடுக்க வேண்டும்?
தற்போது வழக்கமான தமிழ்நாட்டு உணவில் இருப்பவர்கள் எடுக்கலாம்.
எடைகுறைப்பு நோக்கில் இருப்பவர்கள் எடுக்கலாம்
ரத்த அழுத்தம், டயபடிஸ் இருப்பவர்கள் எடுக்கலாம்
வேறு சிக்கலான வியாதிகள் (உதா: சொரியாசிஸ், லூபஸ்) இருப்பவர்கள் எடுக்கவேண்டாம்.
நல்ல உடல்நிலையில் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கும் சராசரி மனிதர்களுக்கான டயட் இது. நீங்கள் சராசரி மனிதர் இல்லை., வேறு சிக்கல்கள் உள்ளன என்றால் அதை தெரிவித்துவிட்டு டயட்டில் எதாவது மாற்றம் வேண்டுமா என கேட்கவும். மிக சிக்கலான பிரச்சனைகளை இதில் தீர்க்கமுடியாது என்பதை மனதில் கொள்ளவும். அதுக்கு பேலியோ அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்
இதை எடுக்க மருத்துவபரிசோதனை அவசியமா?
பொதுவாக இல்லை. ஆனால் வருடம் ஒருமுறை மெடிக்கல் டெஸ்ட் எடுத்துகொள்வது நல்லது. ஆனால் நாங்கள் மெடிக்கல் ரிபோர்ட் கேட்கபோவதில்லை. டயட்டால் உங்களுக்கு புதியதாக எந்த வியாதியும் வராது. டயட்டை ஆறுமாதம் எடுத்துவிட்டு அதன்பின் யதேச்சையாக டாக்டரிடம் போய் அவர் “உங்கள் யூரிக் அமிலம் 10 இருக்கு” என்றால் உடனே அதுக்கு இந்த டயட்டை காரனம் காட்ட கூடாது. டயட்டுக்கு முன் உங்கள் யூரிக் அமிலம் 12 ஆக இருந்திருக்கலாம்..யாருக்கு தெரியும்? ஆக இது வெறும் எடைகுறைப்பு டயட் மட்டுமே. பேலியோவின் பிற நன்மைகளான மெடிக்கல் ரிப்போர்ட், கன்சல்டிங், வியாதிகளுக்கான தீர்வு போன்றவற்றை இதில் செய்யமுடியாது. ஆனால் எடைகுறைப்பே உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
சுகர் இருப்பவர்கள், பிரசர் இருப்பவர்கள் மட்டும் கட்டாயமாக பாஸ்டிங் சுகர், பிபி, ஏ1சி, ஆகியவற்ரை பார்த்தபின்பே கேட்கவேண்டும்.
மக்கள் உணவு குழும முகவரி
விதிகள்:
30 நாட்கள் சீட்டிங் இல்லாமல் டயட்டை பின்பற்ரவேன்டும்.30 நாட்கள் கழித்து உங்கள் எடைகுறைப்பு எப்படி செல்கிறது என்பதை பொறுத்து டயட்டில் மாற்றம் செய்வோம்
செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், வெண்ணெய், ஆட்டுகொழுப்பு போன்றவற்ரை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
வாரம் 3 நாள் 45 நிமிட உடல்பயிற்சி
தினம் சூரியகுளியல் ஆகியவை இதில் கட்டாயம். வைட்டமின் டி டெஸ்ட் எடுக்காமலேயே சொல்கிறோம். உங்களுக்கு வைட்டமின் டி பற்றாகுறை உள்ளது. அதனால் தினம் மதியம் 10- 2 ஒரு அரைமணிநேரம் வெயிலில் முடிந்தவரை குறைந்த ஆடைகளுடன் தொப்பி அணிந்து வெயில் நேரடி தோலில் படும்படி நிற்பது நல்லது (பெண்களுக்கு கூடுதலாக 15 நிமிடம்)
தினம் உண்ணும் உணவுகளை 12 மணிநேரத்துக்குள் உண்டு தினம் 12 மணிநேரம் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருக்கவேண்டும். உதா: இரவு 8 மணிக்கு சாப்பிட்டால் அடுத்தநாள் காலை 8 வரை உபவாசம் இருக்கலாம்
உண்ணகூடிய காய்கறிகள்
காளிபிளவர்
பிராக்களி
முட்டைகோஸ் முள்ளங்கி
பாகற்காய்
காரட்
பீட்ரூட்
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ பீர்க்கங்காய் புடலங்காய் சுரைக்காய்
பிராக்களி
முட்டைகோஸ் முள்ளங்கி
பாகற்காய்
காரட்
பீட்ரூட்
தக்காளி
வெங்காயம்
வெண்டைக்காய்
கத்திரிக்காய்
சுண்டைக்காய்
வாழைத்தண்டு
அனைத்துவகைகீரைகள்
முருங்கை
ஆஸ்பாரகஸ்
ருபார்ப்
ஆலிவ்
செலரி
வெள்ளரி
ஸுக்கனி
குடைமிளகாய்
பச்சை, சிகப்பு மிளகாய்
பூசணி
காளான்
தேங்காய்
எலுமிச்சை
பூண்டு
இஞ்சி
கொத்தமல்லி
மஞ்சள்கிழங்கு
அவகாடோ பீர்க்கங்காய் புடலங்காய் சுரைக்காய்
தவிர்க்கவேண்டிய காய்கறிகள்
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய் பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
சர்க்கரைவள்ளி
உருளைகிழங்கு
பீன்ஸ் (ராஜ்மா உள்ளிட்டவை)
சென்னா
சுண்டல்
பருப்புவகைகள் அனைத்தும்
பயறுவகைகள் அனைத்தும்
சோயா, டோஃபு, எடமாமி, டெம்ஃபே, மீல்மேக்கர்
*சோயா எந்தவடிவிலும் ஆகாது*
அவரைக்காய் பனங்கிழங்கு
பலாக்காய்
வாழைக்காய்
பழங்கள் அனைத்தும்
No comments:
Post a Comment