Thursday, November 17, 2016

என்னடா வாழ்க்கை இது?

ஐ.டி கம்பெனிகளில் சீனியர் பொஸிஷனில் இருப்பவர்கள் பலர் சொல்வதுண்டு: "என்னடா வாழ்க்கை இது..? சம்பாதிச்சி ஒரு 2 கோடி சேமிச்ச உடனே ரிட்டையர் ஆகி, இந்த டென்ஷன் இல்லாம நிம்மதியா புத்தகங்கள் படித்துக் கொண்டு வாழப் போறேன்...!" ஆனால், அப்படி சொன்னவர்கள் ஒருவர் கூட 5 கோடி சேமித்த பின்னும் ரிட்டையர் ஆகி நான் பார்த்ததில்லை..! இன்னும் டென்ஷன் இருக்கும் பெரிய பொஸிஷனுக்கு போகவே முயற்சிப்பார்கள்..!

ஐம்பது வயதுக்கு மேல் மனிதனுக்கு மிக முக்கிய தேவை டென்ஷனற்ற வாழ்க்கைதான் என்று டாக்டர்கள் அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்வார்கள்..! ஆனால், அந்த வயதில்தானே டாக்டர்கள் , தேவையான அளவு செல்வம் இருந்தும், தம் உடல் நலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், கடுமையாய் வேலை செய்து, பெரும் பணம் சேர்க்கிறார்கள்..? பணம் கிடைக்கும்போது விடடுச் செல்ல மனம் வருவதில்லை..!

பணம் சேர்ப்பதால் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் இல்லை என்பது நம் எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது; நாம் மூளையற்றவர்கள் அல்லவே..? ஆனாலும், நாம் எல்லோருமே, நம் கடைசி காலம் வரை, அந்தப் பணத்தை சேர்ப்பதில்தானே விடாத ஆர்வம் காட்டுகிறோம்..?

"போதும்.. இனி பணம் தேவையில்லை.." என்று மனதிற்குள் ஒரு சிந்தனை அவ்வப்போது வந்தாலும், அந்த சிந்தனையை வளர்க்காமல் அழுத்தி மறைத்து, பணம் சம்பாரிக்க, மேலும் விடாமல் பறக்கிறோம், உழைக்கிறோமே, ஏன்..? இதன் சரியான psychological காரணங்கள் என்ன என்று யோசித்தால், தெரிபவை :

1. பணம், செல்வம் சேர்ப்பதால் மட்டுமே செல்வாக்கும், மரியாதையும் கிடைக்கிறது என்று நாம் நம்புகிறோம் என்பது முக்கியமானது..!மனிதனால் உதறித் தள்ள முடியாத ஈகோவின் பாதிப்பு இது..! 'நம் உண்மையான தேவைதான் என்ன..? ' என்பதை நாமாய் யோசிக்காமல், எப்போதும் 'அடுத்தவர்' பார்வை வழியாகவே வாழ்கிறோம்தானே..? நிஜமான 'esteem' என்றால் என்ன என்பதில் நம்ககு தெளிவில்லை..!

2. "வேலை, தொழில் பயங்கர டென்ஷன்..!" என்று சொல்கிறோமே தவிர, உண்மையில், அந்த 'டென்ஷன் வாழ்க்கை'யை விட்டால் வேறெதும் வாழ்க்கை வாழ நமக்கு தெரியாது என்பதுதான் உண்மை..! ஆபீஸ் போய் உழைப்பதைத் தவிர, பலருக்கு, வேறெதுவுமே தெரியாது..! வேறு எந்த விஷயத்திலும் ஈடுபாடே வளர்த்துக் கொண்டது கிடையாது..! அதனால் பயம்..! மனதில் பெரும் பயம்..! அடுத்தவனுக்காக உழைப்பதையே 'பெருமை' என்று நினைத்திருக்கும் நமக்கு, 'நமக்காக வாழ்வது' என்ற 'நினைப்பே' பயமுறுத்துகிறது..!

3. குடும்பம் ஒரு பெரிய காரணம்..! நமக்கு சரி என்று படும் ஒன்றை நம் குடும்பம் ஒப்புக் கொள்ளவில்லையென்றால்..? ஒருவரின் வாழ்க்கை priority அவரின் மன வளர்ச்சியைப் பொறுத்ததுதானே..? சம்பாரிக்கும் பெண், "சம்பாதித்தது போதும்" என்று தன் கணவனை மீறி முடிவெடுக்க முடியுமா..? அல்லது, ஒரு கணவனால். தன் மனைவி/குழந்தைகளுக்கு தன் வாழ்க்கை தாத்பரியத்தை விளக்கி அவர்களையும் அதை ஏற்க வைக்க முடியுமா..?

இதற்கு என்ன சொல்யூஷன்..?

அது அப்புறம்...! முதலில், இதைப் பற்றி சித்திக்கவாவது நமக்கு தைரியம் உண்டா என்பதையே முதலில் சிந்திக்க வேண்டும் நாம்..! ஆம்...! நாம் நம் மனதிற்கு போட்டுக் கொண்ட சில முகமூடிகளை கழட்ட நமக்கே பயமாய் இருக்கிறதே..! அவற்றைக் கழட்ட முதலில் நமக்கு தைரியம் உண்டா..?

Shankar rajaratnam- FB

No comments:

Post a Comment