மேசிலோவின் ”"தேவைகளின் முக்கியத்துவம்"தத்துவமும் எழுத்தாளர்களுக்கான அரசு மரியாதையும்
மேசிலோவின் தத்துவத்தில் கூறப்படுவது போல்
ஒரு மனிதனுக்கு முதல் தேவை
காற்று, நீர், உணவு, உறக்கம், உடை, வீடு
அடுத்து
நலம், (கல்வி மற்றும்) வேலை, குடும்பம், உடைமை, நட்பு
இதில்
கலை, விளையாட்டு, இலக்கியம் எல்லாம் இறுதியில் வருகிறது
கலையோ, விளையாட்டோ, இலக்கியமோ இல்லாமல் ஒரு மனிதன் வாழலாம். அப்படித்தான் உலகின் பெரும்பான்மையான மனிதர்கள் வாழ்கின்றனர். ஆனால் உணவு , உடை, உறைவிடம் வாழ்வதற்கான பாதுகாப்பு இவை இல்லாமல் வாழ முடியாது.
மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மக்கள் முதல்வரின் அரசு சரியான மரியாதையைத் தரவில்லை என்றும் தமிழகம் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்றும் புலம்பல் கூச்சல் ஆங்காங்கே தென்படுகின்றன.
இலக்கியம் "மாதிரி" மட்டும் எழுதியவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றால்
தமிழகத்தில் (உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு பஞ்சமில்லாத, நெய் சோறு சாப்பிடும் ) ஒரு 5 லட்சத்திற்கும் குறைவானவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் எழுதியவருக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றால் சுமார் 5 லட்சம் பேரின் பொழுதுபோக்குக்கு காரணகார்த்தாவிற்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றால்
தமிழ்த்தலைமுறைகளின் பாலியல் வறட்சிக்கு வடிகாலாக இருக்கும் கிளுகிளுப்பு நடிகைகளுக்குத்தான் தரவேண்டும்.
மேசிலோ முக்கோணத்தின் அடிப்படை இரண்டு அடுக்குகளை நிறைவேற்றுவதற்கே அரசாங்கங்கள் இங்கே திணறிக்கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கையில் நெய்சோறு சாப்பிட்ட மேன்மக்கள் , பழைய சோறு சாப்பிடுபவனின் அவலத்தை திண்ணைக்கச்சேரிகள் பேசி உச்சுக்கொட்ட எழுதிய ஒருவருக்கு அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியமேயில்லை.
அரசுமரியாதை என்று ஆரம்பித்தால்,
ஒருநாளில் 25,000 உயிர்களுக்கு பொறுப்பாக இருக்கும் விழுப்புரம், மதுரை இரயில்நிலைய மேலாளர்கள் இறந்தால் கொடுக்கப்படவேண்டும்.
ஒருநாளில் நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களுக்குப் பொறுப்பான வானூர்தி போக்குவரத்து கண்கணிப்பாளார்களுக்கு கொடுக்கப்படவேண்டும்.
ஒவ்வொருநாளும் பேருந்தை கவனமாக ஓட்டும் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் இறந்தால் அரசு மரியாதை செய்யவேண்டும்.
வருங்கால சமுதாயத்தை செதுக்க உதவும் ஆசிரியர்களுக்கு மரியாதைத் தரப்படவேண்டும்.
ஒவ்வோர் இரவும் 100 / 200 உயிர்களைக் காக்கும் மருத்துவர்கள் இறந்தால் மரியாதைத் தரப்படவேண்டும்.
ஊரே பிளாட் போட்டு நிலத்தை விற்க , இன்னும் விவசாயம் செய்யும் விவசாயி இறந்தால் செய்யவேண்டும்.
இவர்களுக்கு எல்லாம் உரிய அரசு மரியாதை கொடுக்கப்பட்டால் எழுத்தாளர்களுக்கு அரசு மரியாதை என்பதை யோசிக்கலாம்.
மேலை நாடுகள் மேசிலோவின் அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மக்களுக்குக் கொடுத்த பின்னர்தான் பொழுதுபோக்கு எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறது.
எழுத்தாளர்கள் என்றால் என்னமோ கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவ்வப்பொழுது அதிர்ச்சி மதிப்பீடுகளை மட்டும் சமுதாயத்திற்கு அளித்து தனதிருப்பை நிலைநிறுத்திக்கொள்ளும் இவர்களுக்கு அதிகபட்சம் கலைமாமணி மாதிரியான பொழுதுபோக்கு விருதுகளே போதுமானது. சமுதாயப் புரட்சிகள் ஏற்படுத்தாத எந்த எழுத்தும் பொழுதுபோக்கு அம்சத்தில் மட்டுமே சேரும். ஜெயகாந்தன் அரசியல் எழுத்து சங்கரமடத்தவரை மட்டுமே குஷிப்படுத்தியது. வேண்டுமானால் சங்கரமடமும் சமஸ்கிருத சமிதியும் ஜெயகாந்தனுக்கு மரியாதை செய்துகொள்ளட்டும்.
நல்லவேளை கலைஞர் ஆட்சியில் இல்லை, எப்பொழுதும் பொழுதுபோக்காளர்களை அவர்களின் தகுதிக்கு மீறி மரியாதை செய்யும் திமுக அரசு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
ரசிகர்களே, எழுத்தாளர்களுக்கு புனித பிம்பமேற்றி கொண்டாடாதீர்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் ஓணாண்டி புலவர்களே. பரிசிலுக்காக கால ஓட்டத்தில் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள். நேர்மை அறம் ஆகியன அரசியல்வாதிகளாஇ விட இவர்களுக்கு மிகக்குறைவு. எழுத்தாளர்களைவிட நமது அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் எவ்வளவோ மேல். 80 சதவீத மக்களுக்கான அடிப்படை மேசிலோ கட்டங்களை நமக்கு உறுதி செய்கிறார்கள்.
கிளிமூக்கு அரக்கன்
No comments:
Post a Comment