ஆதிமனிதன் தினம் 6 மணிநேரம் பிள்லைகள், குடும்பம், நண்பர்களுடன் சோஷியலைஸ் செய்வதில் செலவிட்டான். இன்று அம்பானியாக இருந்தாலும் அத்தனை நேரத்தை பிள்ளகளுக்கும்,குடும்பத்துக்கும் ஒதுக்க முடிகிறதா? முடியாது...அந்தநேரத்தை சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு கொடுத்துவிட்டோம். தினமும் பிள்ளைகளுடன் தந்தை நேரத்தை கழிக்காததால் "குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள்" என ஜனாதிபதி ஒபாமா டிவியில் தோன்றி சொல்ல வேண்டிய நிலை.
ஆய்வுகளும் அதைதான் கூறுகின்றன. பிள்ளைகளுக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, தந்தையும் அந்த அளவு முக்கியம் என. தந்தை அன்பு கிடைக்காத பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே ஆண்துனையை தேடி சென்றுவிடுவார்கள். பையன்கள் கிரிமினல் ஆவார்கள். இதனால் டீன் ஏஜ் கர்ப்பம், வன்முறை முதலானவை வளர்ந்த நாடுகளில் அதிகரித்து வருகின்றன. குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க முடியாத குற்ற உணர்வில் பல பெற்றோர் அவர்களுக்கு விடியோ கேம், கம்ப்யூட்டர், குப்பை உணவு, பாக்கட் மணி என கொடுத்து அவர்களை மேலும் குட்டிசுவர் ஆக்குகின்றனர்
இப்போது நிலை என்னவெனில் தாயும் பிள்ளைகலுடன் நேரத்தை செலவு செய்வது குறைந்து வருகிறது. நகரிக உலகு பாருங்கள்...அம்மாவும் வேலைக்கு போகவேண்டிய நிலை. அப்பாவும், அம்மாவும் வேலைக்கு ஓடி பிள்லைகளை டே கேரில் போட்டு, மாலையில் தாய், தந்தையருடன் கழிக்கவேன்டிய நேரத்தை அவர்கள் டிவியிலும், பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் கழிக்கிறார்கள்..சிறுவயதில் நாம் எல்லாம் பாட்டி, தாத்தாவிடம் ராமாயணம், பாரதம், அரிச்சந்திரன் கதை கதைகளை கேட்டு வளர்ந்தோம். இன்று அதே வயது பிள்ளைகளுக்கு டிவியும், சினிமாவும் காதலிப்பது எப்படி, ஓடிபோவது எப்படி, சிகரெட் பிடிப்பது எப்படி, பெண்களை பஸ்ஸ்டான்டில் ஈவ் டீஸ் செய்வது எப்படி என கற்ருகொடுக்கின்றன. ஊடகங்கள் ரவுடிகளை நாயகனாக்கி ரவுடித்தனம் செய்வதும், வீட்டை விட்டு ஓடுவதும், சின்ன வயதில் காதலிப்பதும் தான் ஹீரோயிசம்" என பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்கின்றன.
பணம் முக்கியம், பிள்ளைகளை நல்ல கல்லூரிக்கு அனுப்புவது முக்கியம். ஆனால் சிறுவயதில் அவர்களுக்கு பெற்றோரின் நேரம் கிடைப்பது இருக்கிறது பாருங்கள், அதை விட முக்கியமானது எதுவும் உலகில் இல்லை. பிள்ளைகளுடன் தினம் ஒரு மணிநேரம் செலவு செய்து, நீதிகதைகள் சொல்லி, டிவி முன் அமரவிடாமல் விளையாட விடுங்கள். இப்படி வளரும் பிள்ளை குப்பை காலேஜில் சேர்த்தாலும் நன்றாக படிப்பான். சிறுவயதில் அவனுடன் நேரம் கழிக்காமல், பணம் சேர்த்து அவனை ஹார்வர்டில் சேர்த்தாலும் அதன்பின் எந்த பலனும் கிடையாது.
உலகில் மனிதனின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் உள்ளன. ஆனால் மனிதனின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய போதுமான வளங்கள் இல்லை!!!
--பேலியோ டயட் நியாண்டர் செல்வன்--
No comments:
Post a Comment