நட்புணர்வு.........
நட்புணர்வு என்பது யாரைக் குறித்துமான, யாரை நோக்கியுமான அன்பு அல்ல. அது பேச்சாலோ அல்லது வேறு விதத்திலோ செய்துகொண்ட எந்த ஒப்பந்தமும் அல்ல. அது ஒருதனிநபருக்கும் மற்றொரு தனிநபருக்கும் இடையே ஆனதல்ல. மாறாக அது ஒரு தனிநபருக்கும் முழு இயற்கைக்குமானது. மேலும் அதில் மரங்களும் விலங்குகளும் நதிகளும் மலைகளும் விண்மீன்களும் அடங்கும். எல்லாமே நட்புணர்வுக்குள் அடங்கி விடுகிறது.
உனது மௌனம் வளர்வதைப் போலவே உனது நட்புணர்வும் வளரும், உனது அன்பும் நேசமும் பிரியமும் வளரும்.
பொறாமை மறையும்போது அங்கு ஆழமான நட்புணர்வு மலரும்.
வாழ்வு ஒரு கண்ணாடி, அதனுடன் நட்புணர்வு கொள் – வாழ்வு அனைத்தும் நட்புணர்வையே பிரதிபலிக்கும்.
நட்பும், நட்புணர்வும் அன்பின் மிக சிறந்த நறுமணமாகும்.
மனதுடன் நட்பு கொள், அதை ஆழ்ந்த நட்புணர்வுடன் கவனி.
நட்புணர்வு எதையும் எதிர்பார்ப்பதில்லை, அது எந்த விதத்திலும் கட்டாயப்படுத்துவதில்லை.
சரியாகப் புரிந்து கொண்டால் என்னுடைய பார்வை தெளிவானது-தீர்க்கமானது என்பது தெரியும்.
இயல்பாக இருந்தால் போதும்.
கடவுள் என்ற தேவை எதுவும் இருக்காது.
வாழ்க்கையோடு ஒவ்வொரு கணமும் இசைந்து வாழ்ந்தால் மலர வழியுண்டு.
மயில்களைப் போல் ஆட வழியுண்டு.
குயில்களைப் போல் பாட வழியுண்டு.
வாழ்வின் சுவையே மாறிப்போகும்.
தன்னிலும் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதனிலும் பூரணத் திருப்தியைக் காண முடியும்.
"மாற்றங்களை விரும்பாத மனம் வந்து விடும்."
இந்த வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாகச் செய்ய வேண்டும் என்ற வீணான ஆசை மறைந்துவிடும்.
இறப்புக்குப் பின் என்ன என்ற கவலையில்லாது வாழ முடியும்.
வாழும் கலை மிகச் சுலபமானது.
இயல்பாக இருக்க வேண்டியது-அவ்வளவுதான்.
அந்த இரகசியத்தைக் கற்றுக் கொள்.
புத்தர் தன்னுடைய வாழ்வை எந்தச் சாத்திரப்படியோ எந்த வேதத்தின்படியோ எந்த நெறியின்படியோ வாழவில்லையே.!அவர் தன் உள்ளுணர்வின்படிவாழ்ந்தார்.அதுதான் அவருடைய பெருமை.
இயல்பாக இரு.நீ நீயாக இரு.ஒவ்வொரு காரியத்திலும் நேர்மையாக இரு.
உனக்குள்ளேயே போய் உன்னுடைய நடுமத்தைச் சேர்ந்துவிட்டால்தான் இது சாத்தியம்.
அதுதான் இந்த உலகின் ஒரே வெற்றி.உன்னுடையவாழ்க்கை உன்னுடையதாகவே இருக்கும் வெற்றி.உன் இயல்பான வாழ்வு.!
ஆனால் அந்த உன்னுடையேதான அந்த இயல்பை விட்டுவிட்டால் கடவுளுக்குத்தான் வெற்றி கிட்டும்.
--ஓஷோ--
No comments:
Post a Comment