தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் .நாவலில் இடம்பெறும் குழந்தைகள் பற்றிய பகுதிகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் . அருள் தந்தையரே,ஆசான்களே உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த இந்த விடயங்களை ஒரு சின்னப் பிள்ளை போல உங்களிடம் சொல்வதற்கு முதலில் என்னை மன்னிக்கவும் என்னைவிட நூறு மடங்கு திறமையாக அவற்றை உங்களால் சொல்ல முடியும் .இருந்தாலும் சொல்கிறேன்
குழந்தைகளிடம் நல்ல கதைகளை படித்து காட்டுங்கள்,ஞானோபதேசம் எல்லாம் தேவையில்லை.தன்னை மேதையாக காட்டிக்கொள்ள கூடாது .உணர்ச்சியோடும், இரக்கத்தோடும் படிக்க வேண்டும்,நீங்கள் படித்துக் காட்டுவதை குழந்தைகள் கேட்பார்கள் என்றால் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். படிக்கும் போது ரசித்து படிக்க வேண்டும்,அனுபவித்து படிக்க வேண்டும்.அங்கங்கே நிறுத்தி சிறு சிறு விளக்கங்கள் தரலாம்,சில சொற்களின் பொருட்கள் விளங்காமல் போய்விடலாம்,அவர்களுக்கு விளங்கியதா இல்லையா என்று கவலைப் பட வேண்டியதே இல்லை,குழந்தைகளின் இதயம் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொள்ளும் அந்த கள்ளங்கபடமற்ற பிள்ளைகளின் மனதில் அந்தக் கதைகள் ஆழமாக பதிந்து விடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் மீது அன்பு செலுத்துங்கள்,அவை பாவக்கறை படியாதவை, அவை தேவதைகள் .நம் இதயங்களை மென்மைபடுத்தவும் ,மேன்மைப்படுத்தவும் ,தூய்மைப்படுத்தவும் நமக்கு நல்வழி காட்டவுமே அவை வாழ்ந்து வருகின்றன.சின்னக் குழந்தையை அடிப்பவன் நாசாமாய் போகட்டும்,அவன் கேடுகெட்ட மனிதன் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து முளைவிடும் .ஒரு குழந்தையின் முன்னால் நீங்கள் உங்களைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியாமற் போனதால் மற்றவர் மீது தீவிர நேயம் கொள்ள முடியாமற் போனதால் ,ஒரு பண்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போனதால் அந்தக குழந்தையின் மனதை சீர்குலைத்து விடுகிறீர்கள் .
சகோதரர்களே ,அன்பு என்பது ஓர் ஆசிரியன்,கண்டிப்பான ஆசிரியன் அன்பைக் கற்றுக்கொள்வது கடினம் தான்,அதற்காக அதிக ஊ தியம் கொடுக்க வேண்டியுள்ளது,அதற்கு கடினமான பயிற்சியும் உழைப்பும் தேவை ஒரு கணப்பொழுதில் அதைக் கற்றுக் கொண்டுவிட முடியாது எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.வாய்ப்பு அமையும் போது யாராலும் நேசிக்க முடியும்.ஒரு கொடியவனாலும் அன்பு செலுத்த முடியும் ஒருமுறை நீங்கள் அன்பைத் தேர்ந்தெடுத்து விட்டால் அப்புறம் நீங்கள் இந்த உலகையே வென்று விடலாம்.
அடக்கத்தை நேசிப்பது ஒரு சக்தி மாபெரும் சக்தி அதை வெல்லும் ஆற்றல் உலகில் எதற்குமே இல்லை நாவலின் முக்கியமான பாத்திரமான அல்யோஷா இறுதியில்,இல்யுசா என்ற சிறுவனின் சவ அடக்கத்தின் போது குழந்தைகளிடம் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறான் அதையும் பார்ப்போம் நாம் அனைவரும் ஒருவரையொருவர் மறந்து விடக்கூடாது ,நமது வருங்கால வாழ்வில் நமக்கு என்ன நேர்ந்தாலும் சரி,ஒருவேளை நாம் இருபதாண்டு காலம் சந்திக்க முடியாமல் போய்விட்டாலும் சரி,நாம் யார் மீது கல்லெறிந்து காயப்ப்டுத்தினோமோ அந்த ஏழை சிறுவனை,நாம் சுமந்து சென்று அடக்கம் செய்த இல்யுசாவை என்றும் மறந்து விடக்கூடாது நாம் நமது வாழ்வில் முக்கியமான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்தினாலும் அல்லது பெரும் இழப்புகளில் வீழ்ந்து விட்டாலும் இங்கே இப்போது நாம் என்ன உணர்வில் ஒன்றுகூடி நின்றோம் நம்மை எந்தவிதமான அன்பு ஒன்று சேர்த்தது எந்த அளவு அந்த பரிதாபத்திற்குரிய பையனை நேசித்தோம் என்பதை மறந்து விடக்கூடாது .
என்னருமை சின்னப் புறாக்களே ஆம் அப்படித்தான் உங்களை நான் அழைக்க ஆசைப்படுகிறேன் .உங்கள் இனிய,அன்பான முகங்களை பார்க்கும்போது சாம்பல் நிற நீலப்புறாக்களே எனது நினைவுக்கு வருகின்றன.
என் அன்புப் பிள்ளைகளே ,நான் இன்று உங்களிடம் சொல்லப் போவதை ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளாமல் போகலாம் இன்றுவரை உங்களிடம் நான் சுருக்கமாகவே பேசியிருக்கிறேன் ,புரிந்து கொள்ள முடியாதபடி தான் பேசி வந்திருக்கிறேன்,ஆனால் வருங்காலத்தில் அதைப் புரிந்து கொள்வீர்கள்.
பிற்காலத்தில் நாம் நினைவுப்படுத்திக் கொள்ளுகிற ,நம் பெற்றோர்களுடன் வாழ்ந்த குழந்தைப் பருவத்து நல்ல நினைவுகளை விட .மேலானவை,வலுவானவை,சிறந்தவை மிகவும் பயன்படக்கூடியவை வேறு எதுவுமே இல்லை .
கல்வியை பற்றி மேன்மையாக நிறைய சொல்லியிருக்கிறார்கள் ஆனால் நாம் சேமித்து வைக்கும் புனிதமான,இனிய ,பிள்ளைப் பருவத்து நினைவுகளைவிட சிறந்த கல்வி வேறு எதுவுமே இல்லை ,அவ்வகை நினைவுகளை நிறைய சேமித்து வைத்துக்கொள்ளும் ஒருவன் வருங்கால வாழ்வு முழுவதிலும் காப்பாற்றப்பட்டு விடுவான் .
ஒருவேளை ஒரே ஒரு நல்ல நினைவுதான் நமது இதயத்தில் தங்கியிருக்கிறது என்றாலும் கூட அதைக் கொண்டே ஒருவன் கடைத்தேற்றம் பெற்றுவிட முடியும்,முக்தி பதமளிக்கும் அந்த ஒரு நினைவு ஒருவேளை பிற்காலத்தில் நாம் தீயவராக மாறிவிட்டாலும் கூட தீசசெயலைத் தடுக்க முடியாதவர் ஆகிவிட்டாலும் கூட, மக்கள் விடும் கண்ணீரைக் கண்டு சிரிப்பவர்களாக ஆகிவிட்டாலும் கூட இப்போது கோல்யா சொன்னானே அனைவர் நலத்திற்காகவும் நான் துன்பங்களை ஏற்பேன் என்று இம்மாதிரி பேச்சுகளை கேட்டு நாம் கேலி செய்யும் கொடியவர்களாக மாறிவிட்டாலும் கூட இறைவன் நம்மை அவற்றிலிருந்து காப்பாற்றி விடுவான்,இந்த நாளை நாம் நினைவில் கொள்ளும் போது நாம் எவ்வாறு இல்யுசாவை நல்லடக்கம் செய்தோம்,எப்படி அவனை நேசித்தோம் இன்று நாம் பேசிய பேச்சுக்கள் என்ன ,எவ்வாறு நாம் நட்பால் பிணைத்திருந்தோம் என்பவற்றை எல்லாம் நாம் நினைவு கூர்ந்தால் இந்தப் பாறையருகே நின்று இன்று நாம் பேசிக்கொண்டதை நினைவுப் படுத்திக் கொண்டால் நம்மில் சிலர் எத்தகைய கொடியவர்களாக மாற நேர்ந்தாலும் ,அவர்களை கண்டு அப்போது நாம் சிரிக்க மாட்டோம் இந்த நாளில் அவர் எவ்வளவு நல்லவராக இருந்தார் என்பதை எண்ணி மன்னிப்போம்.
இந்த நினைவே அவனை நல்லவனாக மாற்றிவிடும் தீமை செய்யாமல் தடுத்து விடும் அவனது சிந்தனை சிறக்கும் ஆமாம் நான் எவ்வளவு அன்பானவனாகவும்,துணிவு கொண்டவனாகவும்,நேர்மையானவனாகவும் இருந்தேன் என்று தனனையே பார்த்து தனக்குள்ளாகவே சிரித்துக் கொள்வான் அப்படி அவன் சிரித்துக் கொள்ளட்டும் மனிதர்கள் அடிக்கடி அன்பைப் பார்த்தும் நல்லதைப் பார்த்தும் சிரிக்கிறார்கள் ,சுய சிந்தனை இல்லாததால்,கவனமின்மையால் வருவது அவ்வகை சிரிப்பு அனால் ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்கிறேன் நண்பர்களே அவ்வாறு ஒருவன் சிரிக்கும் போது அவனது இதயத்தில் ஓர் எண்ணம் உதிக்கும் 'இது சரியில்லை,நாம் சிரிப்பது தவறு இதையெல்லாம் பார்த்து சிரிக்கலாமா என்ற சிந்தனை தோன்றிவிடும் என்று தன பேச்சை இடையில் நிறுத்தினான் .
அல்யோசா மீண்டும் பேச்சைத் தொடர்ந்தான் நாம் வருங்காலத்தில் தீயவர்களாக மாறுவதற்கான ஆபத்து இருக்கவே செய்கிறது ,ஆனால் நாம் ஏன் அவ்வாறு தீயவர்களாக் மாறுகிறோம் என்பதை பற்றி யோசித்துப் பாருங்கள் கனவான்களே முதலாவதாக நாம் எல்லாவற்றிற்கும் மேலாக அன்பானவர்களாக இருப்போம் அப்புறம் நேர்மையானவர்கலாக் இருப்போம் அப்புறம் நாம் ஒருவரை ஒருவர் மறக்காதவர்களாக இருப்போம் இதையே நான் மீண்டும் மீண்டும் சொல்ல விரும்புகிறேன் .
என்னருமை குழந்தைகளே என்னருமை நண்பர்களே வாழ்வை கண்டு அஞ்சாதீர்கள் நீங்கள் நல்லது செய்தால் நேர்மையாக நடந்து கொண்டால் வாழ்வு எவ்வளவு இனியதாக இருக்கும் தெரியமா ?ஆமாம் ,ஆமாம் என்று குழந்தைகள் பரவசத்துடன் முழங்கினார்கள்
பெற்றோர்களே, ஆசிரியர்களே உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த இந்த விஷயத்தை ஒரு சின்னக் குழந்தையைப் போல உங்களிடம் சொல்வதற்கு முதலில் என்னை மன்னிக்கவும் என்னைவிட நூறு மடங்கு திறமையாக அவற்றை உங்களால் சொல்ல முடியும் . இருந்தாலும் சொல்கிறேன் ..
குழந்தைகளிடம் நல்ல கதைகளை படித்து காட்டுங்கள், அறிவுரைகள் எல்லாம் தேவையில்லை.தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ள கூடாது.
உணர்ச்சியோடும், இரக்கத்தோடும் படிக்க வேண்டும்,நீங்கள் கதைகள் சொல்வதை குழந்தைகள் கேட்பார்கள் என்றால் அதற்கு நன்றி சொல்லுங்கள்.
படிக்கும் போது ரசித்து படிக்க வேண்டும், அனுபவித்து படிக்க வேண்டும். அங்கங்கே நிறுத்தி சிறு சிறு விளக்கங்கள் கூட தரலாம், சில கதைகள் புரியாமல் கூட போய்விடலாம், அவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்று கவலைப் பட வேண்டியதே இல்லை, குழந்தைகளின் மனம் எல்லாவற்றையும் இறுதியில் புரிந்து கொள்ளும் அந்த கள்ளங்கபடமற்ற பிள்ளைகளின் மனதில் அந்தக் கதைகள் ஆழமாக பதிந்து விடும்.
எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தைகள் மீது அன்பு செலுத்துங்கள், அவர்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள், அவர்கள் தேவதைகள் . நம் இதயங்களை மென்மைபடுத்தவும், மேன்மைப்படுத்தவும் , தூய்மைப்படுத்தவும் நமக்கு நல்வழி காட்டவுமே அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்கட்டும் . உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் . குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது , உங்கள் மனதில் கோபம் இருக்கக்கூடாது, உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது , நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால், குழந்தைகள் உங்களைக் கவனிக்கும், உங்களது மோசமான நடத்தை , மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் மனதை சீர்குலைக்கும் .
கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதைகள் , ஒரு குழந்தைக்குள் விழுந்து முளைத்துவிடும் . ஒரு குழந்தையின் முன்னால் நீங்கள் உங்களைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியாமற் போனதால் மற்றவர் மீது தீவிர நேயம் கொள்ள முடியாமற் போனதால் , ஒரு பண்பாட்டை உருவாக்கிக் கொள்ள முடியாமற் போனதால் அந்தக குழந்தையின் மனதை சீர்குலைத்து விடுகிறீர்கள் .
சகோதரர்களே , அன்பு என்பது ஓர் ஆசிரியர், கண்டிப்பான ஆசிரியர் அன்பைக் கற்றுக்கொள்வது கடினம் தான், அதற்காக அதிக ஊதியம் கொடுக்க வேண்டியுள்ளது,அதற்கு கடினமான பயிற்சியும் உழைப்பும் தேவை ஒரு கணப்பொழுதில் அதைக் கற்றுக் கொண்டுவிட முடியாது எப்போதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது யாராலும் நேசிக்க முடியும். ஒரு கொடியவனாலும் அன்பு செலுத்த முடியும்
ஒருமுறை நீங்கள் அன்பைத் தேர்ந்தெடுத்து விட்டால் அப்புறம் நீங்கள் இந்த உலகையே வென்று விடலாம், நேசித்தல் என்பது ஒரு சக்தி மாபெரும் சக்தி அதை வெல்லும் ஆற்றல் உலகில் எதற்குமே இல்லை.
“தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் .நாவலில் இடம்பெறும் குழந்தைகள் பற்றிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது”
No comments:
Post a Comment