உயர்ந்த வாழ்க்கை நிகழ்த்தும்படி
உங்கள் பிள்ளைகளைக் கேட்காதீர்கள்
அதீதங்களின் சாதனைகள் அற்புதமானவைதான்
ஆனால் அது அறியாமையின் வழித்தடம்
அதற்குப் பதிலாக அவர்களுக்குக் காட்டுங்கள்
ஒரு எளிமையான வாழ்வின் மாய அற்புதத்தை
ஒரு தக்காளியின்
ஒரு ஆப்பிளின்
ஒரு பேரிக்காயின் சுவைத்தலை
ஒரு செல்லப்பிராணியின்
ஒரு சகமனிதனின்
மரணத்திற்கான கண்ணீரை
ஒரு மெல்லிய தொடுகையின்
முடிவில்லா ஆறுதலை
அவர்களின் எளிமையை உயிர்ப்புடன் வைத்திருங்கள்
அதீதங்கள் அற்புதங்கள் தன்னால் தொடரும்.
by William Martin
தமிழில் - ஷான்
No comments:
Post a Comment