எல்லோருக்குமே வாழ்க்கையில் கடைசி நாட்கள் என்று ஒன்று உண்டு.
அப்போது என்ன செய்வாய்?
அழகாய் லேமினேட் செய்து மாட்டியிருக்கும் கல்லூரிப் பட்டச் சான்றிதழைக் கட்டிக் கொள்வாயா? இல்லையே!
கேரஜுக்கு கூட்டிட்டுப் போங்க. என் காரில் ஒரு முறை உட்காந்து பார்க்க வேண்டும் என்று சொல்வாயா?இல்லையே!
லாபம் தந்திருக்கும் வருமானக் கணக்கினை மீண்டும் ஒரு முறை வாசித்து சந்தோசப் படுவாயா? இல்லையே!
நீ வகித்த பதவிகளும் , நீ காட்டிய அதிகாரங்களும் உனக்கு அனைத்து தரும் என்று நினைக்கிறாயா..?இல்லையே.!
அப்போ எதுதான் முக்கியம் உனக்கு அந்த நேரத்தில்?
சுற்றியிருக்கும் மனுஷங்க தானே.....?
அந்த நேரத்தில் மனுஷங்க முக்கியம் என்றால்....
நீ வாழும் எல்லா நேரத்திலும் அதே மனுஷங்க முக்கியம்தானே?
No comments:
Post a Comment