Friday, November 18, 2016

அம்மாவும் அப்பாவும்


அவள் ஒரு கிராமத்து அம்மா...... நான்பேருந்துக்காக நின்று கொண்டு இருந்தேன்......

என்னிடம் வந்தாள்....." ஆத்தா இத எப்படி பேசுவது? சொல்லித் தறியா?கையில் புதிய போன்..."

நான் சொன்னேன்:" அம்மா பச்சை பட்டன் அமுக்கினால் பேசணும்.....சிகப்பு பட்டன் அமுக்கினால் கட் பண்றது அம்மா என்று சொன்னேன்....

அதற்கு அந்த அம்மா:_" இது என்னோட பையன் வாங்கி கொடுத்தது....." எவ்வளவு பெருமிதம்...... .

அந்த அம்மா முகத்தில்......

என்னோட பையன் வெளிநாட்டுல இருக்கான்......மாசம் ஒரு தடவை பேசுவான்.........

இந்த தடவை இரண்டு மாசம் ஆச்சு? பேசவே இல்லை.....

அவருடைய பையன் பேரை சொல்லி அவன் எப்பையாவது போன் பண்ணி இருக்கான்னு பாரும்மா...?" என்றாள்...

நான் பார்த்தேன்..... ..அந்த பையன் call பண்ணவே இல்லை...... நான் சொன்னேன் ஒரு தடவை call பண்ணி இருக்காங்க..... .. நீங்க தான் பாக்கலை பச்சை என்று நெனைச்சு சிகப்ப அமுக்கிடிங்க போல் " அப்டி என்று பொய் சொன்னேன்...

அம்மாக்கு அவ்வளவு சந்தோசம்..........

சாப்டீங்களா அம்மா.......என்று கேட்டேன்....

எங்க என்னோட ராசா சாப்டானோ இல்லையோ? எனக்கு அவனை நெனைச்சா சாப்பாடே இறங்கல....

நான் சொன்னேன்........ நீங்க நல்லா சாப்டா தானே உங்க பையன் வரும்போது என்னோட ராசா என்று கட்டி பிடிக்க தெம்பு இருக்கும் என்றேன்......

அந்த தாய் அழுது விட்டாள்..... அப்டியா ஆத்தா சொல்ற இனிமேலே சாப்டறேன்.......

எனக்கு அழுகை வந்து விட்டது....

வெளி நாட்டில் இருக்கும் வெளி ஊரில் இருக்கும் சகோதர்களே உங்கள் தாயிடம் பேசுங்கள்....

அம்மா என்ற சொல்லுக்காக ஏங்குபவள்

அவளுக்கு என்றும் நீங்கள் குழந்தை தான்........

              ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார். அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் பொது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டை ஜீன்ஸ் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் மகனோ மிகவும் அமைதியாக அப்பா சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தந்தையை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப்பருக்கைகளை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான். இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர ரெஸ்ட்டோரண்ட் மிக அமைதியானது. மகன் கவுண்டருக்குச் சென்று பில்லிற்ற்கு பணம் செலுத்தி தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான். அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார். மகனோ “இல்லையே நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார். அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிடுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்”. என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.
மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் எம்மை கவனமாகப் பார்த்துக்கொண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் திறமைதான். எமது பெற்ற்றோரும் முதியோரும் தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை எமக்காகத் தியாகம் செய்ததோடு எம்மை மிகுந்த மரியாதையோடு பார்த்துக்கொண்டார்கள். 

படித்ததில் கலங்க வைத்தது... 

No comments:

Post a Comment