Thursday, November 17, 2016

கீழ் கண்டவற்றை செய்யாதீர்கள்


ஆதரவற்றோர் இல்லத்துக்கு உதவியோ , அல்லது ஒரு வேலை உணவுக்கு பொறுப்பேற்று போனாலோ தயவு செய்து கீழ் கண்டவற்றை செய்யாதீர்கள் .

1. இரக்க குணத்தை வெளிக்காட்டி பாவ படாதீர்கள்

2. பரிசு பொருட்களை அவர்கள் கேசுவலாக விளையாடிக் கொண்டிருக்கும் போது கொடுங்கள் , நிர்வாகம் அனுமதித்தாலும் ஒரு போதும் வரிசையில் நிற்க வைத்து உணவோ பரிசோ கொடுக்காதீர்கள்

3. உங்கள் குழந்தை பிறந்த நாளுக்குகாக வேண்டி நீங்கள் போய் இருந்தால் அங்கு வைத்து கேக் வெட்டாதீர்கள்

4. காட்சி பொருளாய் , மிருககாட்சி விலங்காய் போட்டோ எடுக்காதீர்கள் , அதை பொதுவில் பதியாதீர்கள் , போகிறவர் எல்லாம் உணவு கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டு வந்தால் அவர்கள் மனநிலை என்ன நினைக்கும் ? வலது கையால் செய்தது இடது கைக்கு கூட தெரிய தேவையில்லை , மெமரிஸ் க்காக கேசுவலா ஒரு போட்டோ வேணும்னா!

5. பெரும் தொகையை 
நிர்வாகத்திடம் இயன்றவரை கொடுக்காமல் நீங்களே நேரடியாக போய் வேண்டியதை செய்யுங்கள் , பணத்தை விட செலவிடும் நேரம் முக்கியம் .

6. Prayer ஹால் மாதிரி இல்லாமல் முடிஞ்சா பார்டி ஹால் மாதிரி டான்ஸ் ஆடி பாட்டு பாட சொல்லி கூத்தடிச்சிட்டு வாங்க .

சிம்பிளா சொல்லனும்னா எதுவுமே well organized event மாதிரி இருக்க கூடாது !

வாசுகி பாஸ்கர்

No comments:

Post a Comment