போய் விழுந்தாய் அவன்காலில்
பூலோகக் கடவுளென
புண்ணியம் கிடைக்குமென
ஊத்தவாய் ஒப்பிக்கும்
உருப்படா வேதங்களை
பீத்தினான் ஆசியென்று
பிதற்றினான் ஏதேதோ
காவி அணிந்த பயல்
கவர்மெண்டு கங்காணி
கடவுள் பெயர் சொல்லி
கற்பழிக்கும் பெண்பித்தன்
தருகிறான் திருநீறை - பக்தையே
வைத்துக்கொள் மசக்கைக்கு
- யுகபாரதி (yugabhaarathi@yahoo.co.in)
No comments:
Post a Comment