தமிழர் மதத்தின் முறையில் இப்படியும் திருமணம் செய்யலாம்.
மணமக்கள் இருவரையும் மணவுடை, மணமாலை ஆகியயவற்றுடன் ஒரே நேரத்தில் அழைத்து மண இருக்கையில் மணமகனுக்கு வலப்பக்கம் மணமகளும், இடப்பக்கம் மணமகனும் அமரச் செய்தல்.மங்கல விழாத் தலைவர், முன்னிலையர் ஆகியோரை முன்மொழிந்து அமரச்செய்தலும், வழி மொழிதலும்.தலைவர் விழாத் தலைமை ஏற்று மணமக்கள் வீட்டார் சார்பாக வரவேற்றுக் கூறலும் வரவேற்கக் கூறலும் அறிமுக உரையும் சிறப்புச் செய்தலும்.மணவிழாவை இவர் நிகழ்த்துவார் எனத் தலைவர் கூறுதல்.
மணவிழா நிகழ்த்துதல்மணமக்கள் இருவரும் எழுந்து அவையை வணங்குமாறு செய்து மீண்டும் இருக்கையில் அமரச் செய்தல்.இயற்கை இறைவழிபாடு (அ) மொழி வாழ்த்து (அ) திருக்குறள் போற்றி என்பவற்றுள் ஒன்றையோ இரண்டையோ மூன்றையோ சூழ்நிலை காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கூறுதல்.
இயற்கை இறைவழிபாடு
செங்கட் கரும்பாய் இனிப்பானைச்
செழுந்தேன் மலராய் மணப்பானைத்
திங்கட் பிறையாய்த் திகழ்வானைத்
தெளிந்த இசையாய் அமைவானை
அங்கட் புவனம் அளிப்பானை
அறமோ டின்பம் அருள்வானை
நங்கட் புலத்துள் நிறைவானை
நறவார் மலர்த்தூய்ப் பணிவாமே
மொழி வாழ்த்து
நீல வானின் உயரத்தை
நெஞ்சம் கவரும் நிலப்பரப்பைக்
கோலக்கடலின் ஆழத்தைக்
குன்றத் தமைந்த பேருரத்தைச்
சாலத் துளிக்கும் பனிநீரைச்
சாந்தில் தொடுத்த தீந்தேனை
மூலச் சொல்லாய் முகிழ்ந்தோங்கும்
முன்னைத் தமிழே வாழியவே.
திருக்குறள் போற்றி
அகரமுதலாம் ஆதியே போற்றி !
மலர்மிசை ஏகும் மாண்டி போற்றி !
தனக்குவமை இல்லாத தகையடி போற்றி !
எண்குணத் திலங்கும் இறையே போற்றி
அமிழ்த மழையாம் அருளே போற்றி!
ஐம்பொறி அடக்கும் ஆற்றலே போற்றி !
நிறைமொழி அருளும் நிறைவே போற்றி !
குணமென்னும் குன்றே குறியே போற்றி !
மனத்தில் மாசிலா மணியே போற்றி !
வாழ்வாங்கு வாழும் வாழ்வே போற்றி !
மங்கல மனையற மாட்சியே போற்றி !
அறிவறி பண்புப் பேறே போற்றி !
அன்போ டியைந்த வழக்கே போற்றி !
அகர முதலாம் ஆதியே போற்றி ! போற்றி !
மணவிழாத் தொடங்கவுரை திருமணத்திற்கு வந்துள்ள பெருமக்கள், பெற்றோர், உற்றார், உறவினர், உறவு, நண்பு ஆகிய அனைவரையும் வணங்கி அவர்கள் இனிய இசைவுடன் மங்கல விழா நிகழ்த்துவதாகக் கூறுதல்.
No comments:
Post a Comment